பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகார்ம் வில்

பழியுடையதன்று ஆதலின் இற் செறிக்கப்பட்ட காலத்தில் இவை வேண்டப்படுதல் இல்லை (எ-று.)

கர்ப்பினுள் அ ன் பே அறனே......... . துறந்த ஒழுக்கம் பழித்தன்று ஆதலின் காப்பினுள் இவை ஒன்றும் வேண்டா’ என இயையும். பழித்தன்று-பழியுடைய தன்று.

உகஉ. சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே.

இளம்பூரணம் :

என்-எனின். இதுவும் தலைமகற்குரியதோர் திறன் உணர்த்திற்று.

(இ-ள்.) தலைமகன் பொருள்வயிற் பிரியும் வழி" உடன் போக்குக் கருதிய தலைமகட்கு யான் போகின்ற நெறி கல்லுங் கரடுமாகிய சுரம் எனக்கூறுதலும்" நீக்கப்படாது என்றவாறு. இதனுற் சொல்லியது காப்புமிகுதிக்கண் வருத்தமுறுந் தலைமகளை உடன்கொண்டு போதல் தக்கது என்பார்க்கு நெறியருமை கூறி விலக்கவும் பெறும் என்றவாறு, (உக)

தச்சினார்க்கினியம் :

இது, தோழிக்குந் தலைவிக்கு முரியதோர் வழுவமைக். கின்றது.

(இ, ள்..) தலைவன் பிரியக் கருதியவழித் தோழியுந் தலைவி யும் நீ போகின்றவிடம் எல்லாவாற்ருனும் போதற்கரிய நிலமெனக் கூறி விலக்குதலும் நீக்குநிலைமையின்று (எ-று.)

1. ஈண்டுப் பொருள் வயிற்பிரிவு என்றது, தலைவன் வரை வைத்துத் திரு மனத்தின் பொருட்டுப் பொருள் தேடப்பிரிதலை.

2. சுரம் என மொழிதலாவது, தான் பிரிந்து செல்லக் கருதிய வழி, கடத்தற்கியலாத வெம்மைமிகுந்த பாலை எனத் தலைமகட்கு வழியின் அருகை கூறித் தன்னொடு உடன் வருதலை விலக்குதல். வரை நிலையின்று-கீ க்கும் நிலை சில்லை. வரைதல்-நீக்குதல். மொழிதலும் என் புழி உம்மை எதிர் மறையாதலின் சுற்றத்தாரால் இற்செறிக்கப்பட்டுக் காவல் மிக்க நிலைமைக்கண் வருத்த முறுக் தலைமகளை இங்ங்ணம் விலக்காமல் தன்னுடன் அழைத்துச் செல்லுதலே தக்கது என்பதனையும் புலப்படுத்துவதுடன், தலைவன் தான் செல்லக்கருதிய நெறி தலைமகளது மென்மைக்கு இயையாத கடுஞ்சுரமாதலின் கெறியின் அருமையினைக் கூறித் தலைமகள் தன்னுடன் வருதலாகிய உடன் போக்கினை விலக்கவும் பெறும் என்பதனையும் புலப்படுத்துவதாகும்.