பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


శf ఊ தொல்காப்பியம்-பொருளதிகாசக்

உகச. அறக்கழி வுடையன பொருட்பயன் வரினே:

வழக்கென வழங்கலும் பழித்த தென்பர்

இளம் பூரணப் :

என்-எனின். மேலதற் கோர் புறனடை.

(இ-ள்.) அறத்திற் கழிவுடையன. பொருட்குப் பயன்பட வரின் அதனை வழக்கென்று வழங்குதலும் பழித்ததென்றவாறு,

பொருளாவது அகப்பொருளும் புறப்பொருளும், அறத்திற் கழிவு வரும் அகப்பொருளாவது பிறன் மனைக் கூட்டம்,

பொருட்பயன் வருதலாவது அவராலே பொருள் பெறுதல் அவ்விடத்து இன்பமும் பொருளும் பயப்பினும் அதனை வழங்கு தலும் பழிக்கப்பட்ட தென்றவாறு உம்மை முற்றும்மையாகலான்’ வழக்கென் றுரை யற்க என்றவாறு.

'எனைத்துணைய ராயினும் என்னுந் தினைத்துணையுந்

தேரான் பிறனில் புகல்.’’ (குறள், கசசர்

க"பொருட் பயம்பட வரின் பா.வே பழித்தன்றென்ப பா.வே.

1. அறக்கு அழிவுடையன அறத்திற்கு அழிவுடையன. அறத்திற்கு மாறுபட்ட செயல்கள் என்பர் இளம்பூரணர். அறம் என்னும் மகர வீற்றுப் பெயர் முன் குவ்வுருடி புனருமிடத்து இடையே வருதற்குரிய அத்தும் இன்னுமாகிய சாரியைகளின்றி 'அறக்கு எனப்புணர்ந்தது செய்யுள் விகாரம்.

'அறத்திற்குமாறான செயல்கள் பொருளாகிய பயனைக் குறித்து வந்தால் அதனை உலகியலில் வழங்கும் வழக்கு என்ற வகையில் எடுத்துரைத்தலும் சான் றோராற் பழிக்கப்பட் - குற்றம கும்' என்பது இச்சூத்திரத்துக்கு இளம்பூரணர் கொண்ட பொருளாகும். இங்கனம் பொருள் கொள்ளும் முறையில் இச்சூத்திரத் திற்கு அவர் கொண்ட பாடம் "வழக்கென வழங்கலும் பழித்ததென்ப' என்பதாகும்

"பழித்தன்றென்ப எனப்பாடங்கொண்டு இச்சூத்திரத்திற்குப்பொருள் கூறுவர் கச்சின சர்க்கினியர்.

2. “உம்மை முற்றும்மையாகலான் வழக்கென்றுரை யற்க” எனக் காணப் படும் இவ்வுரைத் தொடர் “உம்மை இழிவு சிறப்பாதலான் வழக்கென்றுரை யற்க’ என்றிருத்தல் பொருத்தமாகும். வழக்கென வழங்கலும் பழித்ததென்ப' எனவரும் இத்தொல்காப்பியத் தொடர் க்கு 'உள்ளத்தால் உள்ள லுக்தீதே (திருக்குறள்உ. அவ.) என் புழிப்போல இளம் பூரணர் உரை கொண்டுள்ள திறம் இங்கு கருதத் தகுவதாகும்.