பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் நூற்பா உங் g隱

புறப்பொருட்கண் அறக்கழி வுடையன பகைவர் தேஎத்து திரைகோடலும் அழித்தலும் போலப் பொருட்பயன் காரனத் தான் நட்டோர் தேஎத் துஞ் செயல். இவையும் பொருள் பயப்பி னும் வழக்கென வழங்கு த லாகா என்றவாறு, இதுவும் ஒர் முகத்தான் நீதி கூறியவாறு.

"பழிமலைத் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்

கழி நல் குரவே தலை.' (குறள் . சுதின.)

என வரும். (உங்)

தச்சினார்க்கினியம்:

இஃது, உலகியல் வழக்கன்றிப் பொருள் கூறினும் அமைக வென்றது.

( இ-ள்.) அறக்கழிவு உடையன - உலகவழக்கத்திற்குப் பொருத்தமில்லாத கூற்றுக்கள்; பொருட்பயம் படவரின் அகப் பொருட்குப் பயமுடைத்தாக வருமாயின்; வழக்கென வழங்கலும் அவற்றை வழக்கென்ற புலனெறி வழக்கஞ் செய்தலும்; பழித் தன்று என்ப-பழியுடைத்தன்றென்று கூறுவாராசிரியர் (எ-று.)

தலைவன் குறையுற்று நிற்கின்றவாற்றைத் தோழி தலை விக்குக் கூறுங்கால் தன்னை அவன் நயந்தான்போலத் தலைவிக்குக் கூறுவனவும், பொய்யாக வீழ்ந்தே னவன் மார்பின்” (கலி. 37) எனப் படைத்து மொழிவனவுந், தலைவி காமக் கிழவனுள்வழிப் படுதலும் "தாவி னன்மொழி கிழவி கிளத்தலும்’ (தொல். பொ, 1 15) போல்வன பிறவும் அறக்கழிவுடையனவாம். தலைவி தனக்கு மறை புலப்படுத்தாது வருந்துகின்ற காலத்து அதனைத் தனக்குப் புலப்படுவித்துக்கொண்டே அவளை ஆற்றுவித்தற் பொருட்டு அறக்கழிவுடையன கூறலின் அவை பொருட்குப் பயன் றந்தனவாம்.

HAAAS AAAAS LLLL AAA AASLLLLLSLS MMTS

1. அறக்கழிவுடையன என்பதற்கு 'அறத்திற்கு அழிவுடையன அஃதாவது அறத்திற்கு அழிவினைத் தரும் அறமல்லாத பிறன்மனைக் கூட்டம் முதலிய பொருக் தாச் செயல்கள் எனப்பொருள் கொண்டு இளம்பூரணர் அவை உலகவழக்கில் இடம் பெற்றிருத்தல்பற்றி அந்தச் செயல்களை வழக்கென க் கொண்டு வழங்குதல் சான்றோராற் பழிக்கப்பட்டது என விலக்குதல் வேண்டிப் பழித்தென்ப' எனப் பாடங்கொண் டார்.