பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


போருளியல் - நூற்பா உச ళిf;

ஆய்வு ை :

இது, மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.

மேல், உலக வழக்கில் உள் ளவற்றைத் தன் பாற் கொண்டு அமைதல் செய்யுட்குரிய முறைமையென்றார். அங்ங்னம் கொள். ளுங்கால் அறத்திற்கு மாறானவற்றை விலக்குக என்ற லின்.

(இ-ஸ் அறத்திற்கு அழிவினைத் தருவனவாகிய ஒழு கலாதுகள் பொருளும் இன்பமுமாகிய பயனுள்ளனவாக வருமாயின் அவை உலகியலிற் காணப்படுதல் கொண்டு அவ்ற்றையும் உலக வழக்கென வழங்குதலும் சான்றோர்களாற் பழிக்கப்பட்டது என்பக் அறிஞர். எ-று,

எனவே அரத்திற்கு அழிவினைச் செய்யும் நிலையில் புலனின்பமொன்றே கருதி நிகழும் பிறன் மனைவிழைவு முதலாயின. வும் அறத்திற்கு மாறாய்ப் பொருளொன்றே கருதிய போர்ச் செயல்கள் முதலியனவும் உலகியலில் ஆங்காங்கே சிற்றினத் தாராகிய கொடியோர்களால் நிகழ்த்தப்படுதல் கொண்டு, அவ் விழிந்தனவற்றையும் வழக்கு என்ற வகையிற்சேர்ந்துரைத்த ல் பழி தரும் குற்றமாம் என அறிவுறுத்தல் இச் சூத்திரத் தின் நோக்க மாதல் புலனாம்.

இனி, அரக் கழிவுடையன பொருட்பயன்படவரின், வழக் கென வழங்கலும் பழித்தன்றென்ப’ எனப் பாடங்கொன் டு, * உலக வழக்கிற்குப் பொருத்தமில்லாத கூற்றுக்கள் அகப்பொரு ளொழுகலாற்றிற்குப் பயனுடையனவாக வருமாயின் அவற்றை உலக வழக்கெனவே கொண்டு புலனெறிவழக்கஞ் செய்தலும் பழி யுடையதன்றாம்’ என நச்சினார்க்கினியர் இச்சூத்திரததிற்குக் கூறும் பொருளும் விளக்கமும் எடுத்துக் காட்டும் நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல்சான்ற புலனெறிவழக்கிற்கு ஒத் தன. வாகவே அமைந்துள்ளமையும் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத் தகுவதாகும்.

உகடு. மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க நானுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே.

இளம்பூரணம்:

என்-எனின். இதுவுமது.