பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் நூற்பா உச 薔°蕊

'நெருந லெல்லை' (அகம். 32) என்பதனுள், நெருநல் யான் காக்கின்ற புனத்துவந்து ஒரு தலைவன் தன் பெருமைக்கேலாச் சிறுசொற் சொல்லித் தன்னை யான் வருத்தினேனாகக் கூறி என்னை முயங்கினான்; யான் அதற்கு முன் ஞெகிழ்ந்தே மனநெகிழ்ச்சி அவனறியாமன் மறைத்து வன்சொற்சொல்லி நீங்கினேன்; அவ்வழி என் வன்கண்மையாற் பிறிதொன்று கூறவல்லனாயிற்றிலன்: அவ்வாறு போனவன் இன்று நமக்குத் தோலாத் தன்மையின்மை யினின்றும் இளிவத்தொழுகுவன்; தனக்கே நந்தோள் உரியவாகலும் அறியானாய் என்னைப் புறநிலைமுயலுங் கண்ணோட்டமு முடைய வனை நின் ஆயமும்யானும் நீயுங் கண்டு நகுவோமாக; நீ அவன் வருமிடத்தே செல்வாயாக எனக் கூறியவழி, எம் பெருமானை இவள் புறத்தாற்றிற் கொண்டாள் கொல்லோவெனவும், அவன் தனக்கு இனிய செய்தனவெல்லாம் என் பொருட்டென்று கொள் ளாது பிறழக்கொண்டாள் கொல்லோவெனவுந் தலைவி கருது மாற்றானே கூறினாளெனினும் அதனுள்ளே இவளெனக்குச் சிறந்தாளென்பதுணர்தலின் என் வருத்தந் தீர்க்கின்றில்லை யென் றான் எனவும், அதற்கு முகமனாக இவளைத் தழி இக்கொண்ட தன்றி இவள் பிறழக்கொண்ட தன்மை அவன்க ணுளதாயின் இவளைக் குறிப்பறியாது புல்லானெனவும், இவ்வொழுகலாறு சிறிதுணர்தலில் இக்குறை முடித்தற்கு மனஞெகிழ்ந்தாளெனவும். அவனை என்னோடு கூட்டுதற்கு என்னை வேறு நிறுத்தித் தானும் ஆயமும் வேறு நின்று நகுவேமெனக் கூறினாளெனவுந், தலைவி நாண் நீங்காமைக்குக் காரணமாகிய பொருளை உள்ளடக்கிப் புணர்த்துக் கூறியவாறு காண்க. இதனுள் அறக்கழிவான பொருள் புலப்படவும், ஏனைப்பொருள் புலப்படாமலுங் கூறாக்காமல் தலை வியது மறையை வெளிப்படுத்தினாளாமாதலின் அதனை மிக்க பொரு ளென்றார். ஏனையவற்றிற்கும் உட்பொருள் புணர்த்தவா துணர்ந்து பொருளுரைத்துக்கொள்க. (உடு) ஆய்வுரை :

இதுவும் செயயுட்குரியதோர் பொருள் மரபு உணர்த் து கின்றது. -

(இ-ள்) வாழ்க்கைக் குச் சிறந்தனவாக உயர்த்துக கூறப் பட்ட அறம் பொருள் இன்பம் ஆகிய பொருள்களை எடுத் துரைக்குங்காலும் மக்களது உயிர்ப்பண்பாகிய நாணம்,நீங்காமைக குரிய நல்வழிக்கண் அமைத்து அகமும் புறமுமாகிய பொருள் வகைகளைப் புணர்த்துக கூறுக. (எ-று.)