பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொல்காப்பியம்

பொருளதிகாரம்

பொருளியல்

க. இசைதிரிந் திசைப்பினும் இயையுமன் பொருளே அசைதிரிந் திசையா என்மனார் புலவர்.

என்பது சூத்திரம்.

இளம்பூரணம் :

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், பொருளி யல் என்னும் பெயர்த்து; பொருளியல்பு உணர்த்தினமை யாற் பெற்ற பெயர். என்னை பொருளியல்பு உணர்த்தி யவாறு எனின், மேற் சொல்லப்பட்ட ஒத்துக்களினும் இனிச் சொல்லும் ஒத்துக்களினும் வரும் பொருளினது தன்மை யுணர்த்துதலிற் பொருளியல் உணர்த்திற்றாம். இதனை ஒழிபியல் எனினும் இழுக்காது. அகப்பொருள்

1. பொருளதிகாரத்தில் அகத்திணையியல் முதல் கற்பியல் சறாக முன் லுள்ள இயல்களிலும் மெய்ப்பாட்டியல் முதலாக மரபியல் சுறாக்ப் பின்வருக இயல் களிலும் கூறப்படும் பொருளினது தன்மையுணர்த்துவது இவ்வியலாதலின் இது பொருளியல் எனப்பெயர் பெறுவதாயிற்து என்பதாம்.