பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல்-நூற்பா உசு அஇ

மாய் வீற்றுக்கொளப்படா - வேறுபட்டானொருவன் வலிந்து கொள்ளப்படாதனவுமாய் , எம்மென வரூஉங் கிழம்ைத் தோற். எம்முடையனவென்று தோழி கூறப் புலனெறி

வழக்கிற்குப் பொருந்திவரும் உரிமையையுடைய உறுப்புக்கள்: அல் லாவாயினும் புல்லுவ உளவே வழுவாயினும் பொருந்து வனவுள (எ-று.)

உறுப்புக் கட்புலனாதலின் தோற்றமென்றார். எனவே, உறுப்பொழிய இந்நான்கும் எம்மெனக் கூறலாக்ாவென்றார்.

'ஒருநாளென், தோள் நெகிழ் புற்ற துயரால் துணிதந்தோர்"

(கலி. 37) எனவும்,

' என்தோள் எழுதிய தொய்யிலும்' (கலி. 18) எனவும் தலைவி தோளினை என்தோள் என்றாள். 'தன்கால் அரியமை சிலம்பு கழிஇப் பன்மாண் வரிப்புனை பந்தொடு வைகிய செல்வோள் இவைகாண் தோறும் நோவாம் மாதோ' (தற். 12)

'நெய்தல் இதழுண்கண், -

(கலி. 39)

நின்கண்ணா கென் கண் மன'

என்பனவும் இதன் கணடங்கும். உள'வென்றதனாற் சிறுபான்மை தலைவி கூறுவனவுங் கொள்க. அவை,

என்னொடும் நின்னொடும் சூழாது’’ (அகம்.128)

எனவும்,

'நின்கண்ணாற் காண்பென்மன் யான்' (கலி. 39)

எனவும் வரும்.

ஆய்வுரை :

இஃது ஒருசார் மரபுவழு அமைக்கின்றது.

(இ . ள்.) தந்தைக்குரிய பொருள்களாய் மக்கள் அடைதற் குரிய பொருள்களிற் சேராதனவுமாய், அறமும் புகழுங்கருதி ஒருவர்