பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல்-நூற்பா உள அன

'சிறுகாலை பிற்கடை வந்து குறிசெய்த

அவ்வழி என்றும் யான் காணேன்'

என்பது புணர்வுகுறித்து வந்தது.

" உள்ளுதொறு நகுவன் தோழி வள்ளுகிர்

மாரிக் கொக்கின் கூர் அல கன்ன குண்டுநீர் ஆம்பல் தண்துறை யூரன் தேங்கம ழைம்பால் பற்றி என் வயின் வான் கோல் எல்வளை வவ்விய பூசற் சினவிய முகத்துச் சினவாது சென்று நின் மனையோட் குரைப்பல் என்றலின் முனையூர்ப் பல்லா நெடுநிரை வில்லின் ஒய்யும் தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப் புலம்பிரி வயிரியர் நலம்புரி முழவின் மண்ணார் கண்ணின் அதிரும் நன்ன ராளன் நடுங்களுர் நிலையே. ’’ (நற். க00)

இஃது ஊடல் குறித்து வந்தது. இப்பரத்தையர் பொருட் பெண்டிராகலின் இன்பம் பயக்குமோ எனின், அஃது இன்பமாமாறு வருகின்ற சூத்திரத் தான் எல்லாப் பொருட்கும் உளதாகும் பொது விலக்கணம் கூறியவாறு.' (உள)

நச்சினார்க்கினியம் :

இஃது, ஒன்றே வேறே (தொல், பொ. 93) என்னுஞ் சூத்திரத்து ஒத்த கிழவனுங் கிழத்தியும்' என்ற ஒருமை பன்மைப்பாலாய் உணர்த்துகவென வழுவமைத்தது."

1, இன் பத்திற்குப் பொது விலக்கணம் கூறுவதாக அமைந்த அடுத்த சூத்திரத்துடன் பொருளியைபுபுலப்படுதல் வேண்டி இளம்பூரணர் இச்சூத்திரத்திற்கு இவ்வாறு உரை வரைந்து எடுத்துக்காட்டுத் தந்து விளக்கினார் எனக் கொள்ள வேண்டியுளது.

2. வாழ்க்கையில் ஆண்பெண் இருபாலார்க்குரிய இயல்புகளையும் செயல் முறைகளையும் விரித்துரைக்கும் நூல்களிலும் உலகவழக்கிலும் கிழவன் கிழத்தி என வும் ஒருவன் ஒருத்தியெனவும் ஒருமை யெண்ணில் வைத்துரைக்கப்படும் ஆண்பால் பெண்பால் ஆகிய பெயர்கள் ஈற்றெழுத்தாகிய விகுதியமைப்பின்படி அவ்வப் பாலின், கண் தலைவன் தலைவி என வும் ஒருவன் ஒருத்தி என வும் இவ்வாறு ஒவ்வொரு, வரையே குறிக்குங் தன்மையனவாயினும் வழக்கியலில் இச்சொற்கள் ஒருமை யெண்ணிலன்றி அத்தன் மையுடையராய் அவ்வப்பாலினரான பலரையும் சுட்டி வழங்குதல் பொருளியல் மரபாம் என்பதனை அறிவுறித்தும் கிலையில் அமைந்தது

இந்நூற்பா என்பது கச்சினார்க்கினியர் கருத்தாகும்.