பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藝教 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

ரங்களில் கூறப்டம்.ட மெய்ப்பாட்டுணர்வுவகை எட் ம் ஒரு பான்மையவாக மற்றொரு பெற்றியவாய் உடைமை நடுக் கெனாஅ இவையுமுளவே-உடைமை,முதல் நடுக்குவரை எவ். வெட்டாய் எண்ணப்படு முணர்வுகளும் செய்யுட்பொருள் சிறக்க வருவனவுன: அவையலங்கடையே-இவை உளவாதல் முன் குறித்த மெய்ப்பாடு எட்டன்வகை தோன்றாவிடத்தாம்

குறிப்பு :- இதில் கூறப்பெறும் உணர்வு முப்பத்திரண்டும் எனா அ' எனும் அளபெடை இடைச்சொற்களால் எவ்வெட்டாய்ப் பிரித்து எண்ணப்படுதலால், இவை முதலிற் குறித்த நானான்காய்ப் பண்ணைத் தோன்றும் மெய்ப்பாடு எட்டன்' வகைகளின் வேறாதல் வெளிப்படை அன்றியும், நானான் காய்த் தொகுத்து முன் மெய்ப்பாட்டு வகை எட்டு எனச் சுட்டிய எண்ணான்குணர்வும் புறத்தே மெய்யிற்றோன்றுந் தன்மையகாதல், 'கண்ணிய புறனே நானான்.கென்ப' என முதற் சூத்திரத்தும், 'அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப' எனத் தேற்றத்துடன் மூன்றாஞ் சூத்திரத்தும் வற்புறுத்தப் பெறுதலால் தெளிவாகும். அதனாலும், அப்பான்மைசுட்டி அவற்றை ஆங்கவை ஒருபாலாக எனப் பிரித்து நிறுத்தி, "ஒருபால்' என வேறுதொடங்கி எல்வெட்டாய் வகுத்து இச்சூத்திரத் தெண்ணப் பெறும் உணர்வு முப்பத்திரண்டும் புறக்குறிச் சுட்டின்றி வாளா கூறப்பெறுதலாலும், நகை முதலிய புறக்குறி பெறும் பான்மைய எண்ணான் குணர்வின் மெய்ப்பாடு எட்டே எனக் குறித்து விலக்கியதாலும், இதில் நாலெட்டும் முன் எண்ணான்கென்ற மெய்ப்பாட்டு வகைகளின் வேறாய்ச் செய்யுட் .ெ பா ரு ள் சிறக்கவரும் உணர்வுகளாதல் தேற்றமாகும். இப்பான்மை வேறுபாடு விளங்க, இச்சூத்திரத் துவக்கத்தில் இல் வுணர்வுகளை எண்ணத் தொடங்குமுன் "ஆங்கவை ஒரு பாலாக, ஒருபால்” என நிறுத்த சொற்பெய்த குறிப்புமறிக. இவை புறக்குறிச்சுட்டுப் பெறாமையால் மெய்ப்பாடாகச் சிறவாவெனினும் மெய்ப்பாடுகள் போலச் செய்யுட்பொருள் சிறக்கவரும் உள்ளுணர்வுகளாதலின் இவ்வியலில் ஒப்பமுடித்துக் கூறப்பெற்றன.