பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்.. தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

சிதைவு பிறர்க்கின்மை என்பது அங்ங் ைம் ந கு ந ய மறைத்த வழியும் உள்ளஞ் சிதைந்து நிறையழியுமாகலின் அச் சிதைவு (தலைவிக்கன்றிப்) பு றத்தார்க்குப் புலனாகாமை நெஞ் சினை நிறுத்தலும் அது,

'அகமலி யுவகைய ளாகி முகனிகுத்து

ஒய்யென இறைஞ்சி யோளே." (அகம்.86)

எனத் தலைமகன் அறிய மெய்ப்பட்டதென்பது. இதுவுந் தலை

சுைற்குரித்தன்று, தன்சிதைவுணர்த்தினல்லது மறைக்குந்துணைச் சிதைவின்மையின்; என்னை?

பெருமையு முரனு மாடுஉ மேன' (தொல், பொருள், 98) என்பவாகலின்,

இவை களவிற் சிறந்தனவாவதல்லது கற்பினுள் வருவன வல்ல என்றுணர்க. "சிதைவு பிறர்க்கின்மை யெனவே சிதைவு தலைமக னுணருமென்றானாம்.

தகுமுறை நான்கு என்பது. இங்கனம் ஒன்றன்பின் ஒன்று தோன்றுதற்குத் தகுமெனப்பட்ட முறையானே வந்த் நான்கும் என்றவாறு ஒன்றென மொழி.ப - களவிற்கு முதற்கூறென்ப (ar一gD.)

இனி, இவை நான்கும் முறையானே ஒருங்குவந்த செய்யுள் கிருமிசிாது.

'யான்தற் காண்டொறுந் தான்பெரிது மகிழாள்

வாணுதல் வியர்ப்ப நாணினள் இறைஞ்சி மிகைவெளிப் ப.ாது நகைமுகங் கரந்த தன்னுதல் அரிவை தன்மணஞ் சிதைந்ததை நீயறிந் திலையால் நெஞ்சே யசனநிந்தேனது வாயா குதலே.'

22, தகைவத்கன்றிப்) புறத்தார்க்குப்புலனாகாமை என்றிருத்தல் வேண்டும் என்பது, "தலைமகன் அறிய மெய்ப்பட்ட தென்பது' எனப் பின் வரும் உரைத் தொ.ரசல் உய்த்துணரப்படும்.