பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூ ற்பா கசு 蠍-索

கடுஞ்சொல் உளவாமன்றே, அவற்றை முனியாது ஏற்றுக் கொண்டு புறத்தார்க்கு இது புலனாங்கொலென்று நாணுதலும்’

கொடுப்பவைகோடல் - தலைமகனாற் கொடுக்கப்பட்ட தழையுங் கோதையுந் தாருங் கண்ணியுந் தோண்மாலைவு முதலா யினகொண்டு கையுறை பாராட்டுதலும்; உளப்படத்தொகைஇ எடுத்த நான்கே நான்கென மொழிப - கொடுப்பவை கோட ல கப்படத் தொகுததோதிய நான்கும் நான்காவது (ar一gg.J"

"எடுத்த'வென்றதனாற் கொடுப்பவை கொள்ளாது மறுத் தன் முதலியனவுங் கொள்க

புணர்ச்சிப்பின்னரல்லது பாராட்டுள்ளம் பிறவாமையானும் அதன் பின்னரல்லது பிறரோடு கூற்றுநிகழாமையானும் அக்கூற்றுக் கேட்டல்லது தமரான் ஈரமில் கூற்றங்கோடலின்மை யானும் அவையெல்லாம் முடிந்தவழித் தலைவன் மேற்சென்ற உள்ளத்தாற் கொடுப்பவைகோடற் குறிப்பின ளாமாகலானும் அம்முறையான் வைத்தானென்பது இவற்றுக்குச் செய்யுள்:

"ஒருநாள் வந்து பலநாள் வருத்தும்

நின்னே போலுநின் தழையே யென்வயின் நிற்பா ராட்டியுஞ் சொற்கொளல் இன்றியும் யாயெதிர் கழறலிற் பேரலர் தானியும் மயல்கூர் மாதர்க்குத் துயர்மருந் தாயினும் நோய்செய் தன்றால் தானே நீ தொடக் கரிதலின் ஓரிடத் தானே'

SS SSAAASAAA MMMM AA AMMM MAAA SAAS

8. ஈரம் இல் கூற்றம்-அன்பில்லாத கடுஞ்சொல். கூற்று-சொல், கூத்த என்பது அம் சாரியை பெற்றுக் கூற்றம் என்றாகியது.

அறிமடம் கெடத் தலைமகன்பால் சொல்கிகழ்ந்த திலையில் அவளுடைய சுந்தித்தார் இது காறும் கூறப்படாத கடுஞ்சொற்களால் தலைமகளை இடித்துரைத்தில் இயல்பு. தலைமகள் சுற்றத்தார் கூறிய கடுஞ் சொற்களை வெதுக்காமல் tரத்துக் கொள்வதோடு தனது களவொழுக்கம் புறத்தார்க்கும் புலன்ாகி அலராய் விடுமோ என காணுதல் , ஈரமில் கூற்றம் ஏற்று அவர் கானல் என்னும் மெய்ப்பாடாகும்.

4. கொடுப்பவை-தலை: கன் கையுறையாகக் கொடுக்கும் பணி சித் பொருள். கன். கோடல் என்றது அவருறை அன்புடன் ஏற்றுக்கொண்டு பாராட்டும் உள்ளத் தளாதலை. எடுத்தல்-தெ" தது எடுத்துக்கூதல்.