பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா கக 噶覆硫,

'கொடுப்பன கோடல் செயலாயினும், கொள்பவளுணர்வை உள்ளவைப்பதால் மற்றவள் உள்ளுணர்வு மூன்றொடும் சேர்த் தெண்ணுதற் குரித்தா மென்னுங்குறிப்பால், 'உ ள ப் ப - த் தொகைஇ' என அதனைப் பிரித்துச் சுட்டிக் காட்டினர்"

இவை கரப்பு விருப்பைக் கடந்தெழுந் திறத்தவாதலின், எடுத்த நான்கெனக் குறிக்கப்பெற்றன."

ஏகாரம்-இசை நிறை, புலவர் எனும் எழுவாய் பொருட் டொடர்பால் அவாய்நிலையாய்க் கொள்ளப்பட்டது. (கசு)

ஆய்வுசை

இது, கள விற்குரிய நான்காங்கூறாகிய மெய்ப்பாடுணர்த்து கின்றது.

( இ-ஸ். பாராட்டெடுத்தல், மடந்தபவுரைத்தில் ஈரமில் கூற்றும் ஏற்று அலர் நாணல் கொடுப்பவை கோடல் என்பதுடன் கூட்டி எடுத்துரைத்தற்கேற்ற நான்கும் களவிற்குரிய தான்காங் கூராம் என்பர் ஆசிரியர். எ-று.

இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனது பெருமையினை நினைந்து பாராட்டும் உள்ளக் குறிப்பினைத் தலைவியுடையளாதல் 'பாராட்டெடுத்தல்’ என்னும் மெய்ப்பாடா கும். விளையாடும் பருவத்து இயல்பாகிய மடைமை நீங்கக காமப் பொருட்க ண்ணே சிறிது அறிவுதோன்ற உரையாடுங் குறிப்பின ளாதல், மடந்தபவுரைத்தல' என்னும் மெய்ப்பாடாகும். தனது களவொழுக்கம சிறிது வெளிப்படும் நிலையிற் சுற்றத்தார் கூறுங்கடுஞ்சொற்களை முனியாது ஏற்றுக்கொண்டு இது புரத தார்க்குப் புலப்பட்டு அலராய் விரியுமோ என நானும் உள்ளக குறிப்பினளாதல், ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல்" என்னும் மெய்ப்பாடாகும், ஈரம்- அன்பு. கூற்று என்பது கூற்றம் என அம்சாரியை பெற்றது.

SLLL AS AAAAAS TAAAS

', 'எடுத்த கான்கு என்பதற்கமைக்த இவ்விளக்கம் மிகவும் பொருத்தமுடைய " و غشقع * تغ