பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பாக

போல, அப்பொருள் கண்டவழியல்லது நகையும் அச்சமுந்தோன்றா. ஒழிந்த காமமுதலியனவும் அன்ன. இக்கருத்தே பற்றிப் பிற்காலத்து நாடக நூல் செய்த ஆசிரியரும்,

'இருவகை நிலத்தினியல்வது சுவையே' (செயிற்றியம்) என்றாரென்பது.

இனி, இருவகை நிலனென்பன உய்ப்போன் செய்தது காண்போர்க்கெய்து தலன்றோவெனின் சுவையென்பது ஒப்பினானாய பெயராகலான் வேம்புசுவைத்தவன் அறிந்த கைப்பறிவினை நாவுனர்வினாற் பிறனுணரான், இவன் கைப்புச்சுவைத்தானெனக் கண்ணுணர்வினான் அறிவதன்றி, அதுபோல அச்சத்துக்கு ஏதுவாகிய ஒரு பொருள் கண்டு அஞ்சி ஒடிவருகின்றா னொருவனை மற்றொருவன் கண்டவழி இவன் வள்ளெயிற் றரிமா முதலாயின கண்டு அஞ்சினா னென்றறிவ தல்லது வன்ளெயிற்றரி மாவினைத் தான்காண்டல் வேண்டுவதன்று; தான் கண்டானுயின், அதுவுஞ் சுவையெனவே படும். ஆகவே அஞ்சினானைக் கண்டு நகுதலுங் கருணைசெய்தலுங் கண்டோர்க்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலான் உய்ப்போன்செய்தது காண்போனுய்த்த அறிவின் பெற்றியாற் செல்லா தாகலின் இருவகை நிலமெனப்படுவன சுவைப்பொருளுஞ் சுவைத்தோனுமென இருநிலத்தும் நிகழுமென்பதே பொரு ளாதல் வேண்டுமென்பது.

குறிப்பென்பது, கைப்பின் சுவையுணர்வு பிறந்தவழி வெறுப்பு முதலாயின உள்ள நிகழ்ச்சிபோல அஞ்சுதக்கன

5 "உய்ப்போன் செய்தது காண்போர்க்கெய்துதல்

மெய்ப்பா டென்ப மெய்யுணர் க்தோரே'

என்றார் செயிற்றியனார். இங்குக் குறிக்கப் பட்ட .ப் போன் : என்பதற்கு அச்சம் முதலிய சுவை பினை நுகர்வே ன் எனப் பொருள் கொண்டு, அச்சம் முதலிய சுவையினை நுகர்வோன்பால் கி , ழம் அச்ச முதலானே அன்ன து மெய்க்கண் தோன்றும் வியர்த்தல்கடுக்கம் முதலிய சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர் க்குப் புலனாகுக் தன்மை மெய்ப்பாடு எனக் கொள்ளப்படும்: என்றrள் இளம்பூரணர். இனி, உய்ப்போன்’ என்றது, காடக அரங்கில் கின்று கடிக்கும் கூத்தனை எனக் கொண்டு, இங்ஙனம் காடக அரங்கிற்புகுந்து கடிக்கும் கூத் தனும் அங்கடிப்பினை அவைக்கண் இருக் து காண்பே ரும் ஆகிய இருதிறத்தாருமே சுவை நிகழ்ச்சிக்குரிய இருவகை கிலம் எனக் கூ அவாருமுனர். இவர் கற்றினை மறுத்துரைக்கும் முறையிலமைந்ததே பின்வரும் பேராசிரியர்

உரைப்பகுதியாகும்.