பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் நூற்பா கல் శిష్ఠీక్ష

புணர்வின் நிமித்தமென நினையாது, அன்ன பிறவுள்ளனவும் தள்ளாது கொண்டமைகவெனக் கூறுதலால் புறனடையுமா யிற்று.

களவொழுக்கம். கந்தருவம்போல நேர்ந்தவழிப் புணர்ந்து தீர்ந்தவழி மறக்கும் திறத்ததன்றாம்; இருவயினோத்துப் பிரி யாது கூடிவாழ்தல் அன்றேல் தரியாது இறந்து முடிதல் எலும் துணிவுடையார் இருபாலவரும் ஒருவரை ஒருவர் இன்றியமை யாக் காதலுடையார்க்கே உரியதாகலின், அவர் காதலொழுக் கம் மன்னிய வினை' எனப்பட்டது மன்னுதல் = நிலையுதற் பொருட்டாதல், 'மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை' எனுங் குறளாலும், 'மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர்' எனவும், 'மன்னுதல் வேண்டின் இசைநடுக” எனவும் வருஞ் செய்யுளடிகளாலு மறிக நிலையாக் காமப் பொய்யொழுக்கை விலக்கி, என்றுங்குன்றா திருவயினொத்து தி ைல த் த கா த ற் றிணைக்கே இம்மெய்ப்பாடுகளுரிய என்பதை விளக்க, இவை 'மன்னியவினைய நிமித்தம்’ எனச் சுட்டப்பட்ட ச ல் வி அறிந்து பாராட்டற் பாற்று. (க.க)

ஆய்வுரை இது, நிலைபெற்ற காதல் வாழவுக்கு இன்றிமையாத மெய்ப் பாடுகளாவன இவை யெ னச சுட்டுகின்றது.

(இ~ள மேல் அறுவகைக்கூற்றினவாகச் சொல்லப்பட்ட இருபத்துநான்கு மெய்ப்பாடுகளாகிய அவைபோல்வன வும் அவை தமது உட்பகுதியாகி வருவன பிறவும் நிலைபெற்ற ஒழு கலாறாகிய நடுவணைந்திணைககுரிய நிமித்தமாம் மெய்ப்பாடுகள் என்பர் ஆசிரியர் ள - து.

அன்ன-அவை போல்வன. அன்னவும் என எண் ஐம்மை விரித்துரைக்க மன்னிய வினையென்றது என்றும் மாறாது நிலை பெற்ற அன்பி ைஐந்திணை யொழுக்கத் தினை. நிமித்தம்-காரணம். (க.க) உம். வினையுயிர் மெலிவிடத் தின்மையும் உரித்தே.

இளம்பூரணம் என்-எ னின். மேலதற்கோர் புறனடை யு ண | த் து த ல் துதலிற்று.