பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தி ய்ப்பாட்டியல்-நூற்பா க தி

பொருளே யாதலானும், செய்யுள் பொருளைப் புனைத் துரைக் குங்கருவியேயாதலானும், முதலில் சிறப்புடைப் பொருட்டுறை வகைகள் அகத்திணை புறத்திணை களவு கற்பு பொருள் వాణా ஜந்தியலான் வகைபடத் தொகுத்து விளக்கப்பட்டன. பின் அகப்புறப் பொருள்களைப் புனைந்துரைக்கும் செய்யுள் வகை கூறத்தொடங்கி, அச்செய்யுளுறுப்புக்களுள் பொருட்சிறப்பிற்கு மிக்குரிமையுடைய மெய்ப்பாடு உவமை வகைகளை முன் இரண் டியல்களான் முறையே வகுத்து விளக்கி, பிறகு பிற செய்யு குறுப்பும் அமைப்பும் வகையும் செய்யுளியலில் தொல்காப்பியம் தொகுப்பாராயினர். இம்முறையில் இவ்வியல் மெய்ப்பாடு என்னும் செய்யுளுறுப்பை விளக்குவதாகும்.

மெய்ப்பாடு என்பது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாயி

மலே யாரும் இனிதறியப் புலப்படுத்தும் இயற் புறவுடற் குறியாம்.

இயற்றமிழ்ச் செய்யுளில் இயற்குறியன்றிச் செயற்கைக் குறி புனர்க்கும் வழக்காறில்லை; உணர்வோடுள்ளக் கருத்தை யுரைக்கப் பல செயற்கைக்குறி வகுத்துக் கோடல் கூத்து நூற் கொள்கையாகும். (பட்டாங்கு) மெய்ப்படத் தோன்றும் உள்ளுனர்வை மெய்ப்பாடென்றது ஆகுபெயர். உள்ளுணர்வை உரிய இயற்புறக் குறியால் புலவன் செய்யுளில் புலப்பட அமைத்தல் வேண்டுமாதலின், செய்யுளுறுப்புக்களுள் மெய்ப்பாடு

~x

சிறப்பிடம் பெற்றது. அதனை விளக்கும் பகுதி மெய்ப்பாட்டியல்.

'உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளான் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்” (செய். சூ.204 ) எனும் செய்யுளியற் சூத்திரம் மெய்ப்பாட்டியல் கூறுகிறது.

இம்மெய்ப்பாடுகள் பொதுவாக அகப்புறப்பொருட்டுறை அனைத்திற்கும் அமையவருவனவும், சிறப்பாக அகத்துறைகட் காவனவும் என இயல் வேறுபாடுடையவாதலின், பொதுவியல் புடையவற்றை இவ்வியலில் முதற் கூறிச் சிறப்பியல்புடையன பின்னர் விளக்கப்பெறுகின்றன. ஒருவரின் உள்ளுணர்வுகளுள் மற்றவர் கண்டுங் கேட்டும் அறியப் புறவுடற் குறியாற் புலப்படு பவையே இயற்றமிழ்ச் செய்யுளில் மெய்ப்பாடு எனப்பெறும்.