பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா உ.உ 部熟編

பேராசிரியம்

இது, மேல் அவையுமுள (தொல். பொருள். 269) எனப் பட்ட மெய்ப்பாடு கூறுகின்றது."

(இ-ள்) எண்ணப்பட்ட இருபதும் மன்னிய வினை ய நிமித்தம் (தொல். பொருள். 267 என்பான் நலத்தக நாடின் அதுவே யாமென்றானென்பது. இவை புணர்ச்சிக்கு நிமித், மாகாதனபோன்று காட்டினும் அவற்றை மிகவும் ஆராய்க் துணரிற் புணர்ச்சிநிமித்தமேயாம். (எ-று)

1. இன்பத்தை வெறுத்தலென்பது, யாழுங் குழ லுங் பூவுன் சாந்தும் முதலாக இன்பத்திற்கேதுவாகிய பொருள் கண்டவழ: அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல். அவை காமத்திற்கு ஒருவகையான் ஏதுவாகலின் மன்னிய வினைய நிமித்த மெனப் படுமாகலான் அவற்றை வெறுத்தல் புணர்ச்சிக் கேதுவாக: தன்றேயாயினும் அதனை ஆராய்ந்துணரின் தி மி த் த .ெ ம ன வேண்டுமென்பான் நலத்தக நாடின் அதுவே என்றானென் பது. கலக்கமுமென நின்ற உம்மை மேற்கூறிய பத்தொன் பானையுந் தழுவுதலின் இறந்தது தpஇயிற்றாம்.

'கல்லாக் கோவலர் ஊதும்

வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக் காலே' (அகம். 74)

என்புழி, இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக்கேதுவா மென்பது கருத்து.

"எல்லி, மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில் துணையொன்று பிரியினுந் துஞ்சா காணெனக் கண்ணிறை நீர்கொண்டு சுரக்கும் ஒண்ணுதல் அரிவையான் என்செய்கோ லெனவே'

(அகம். 56)

1. "இத்தொடர் இவை:புமுள' எனப்பட்ட மெய்ப்பாடு கூறுகின்றது ன். திருத்தல் பொருத்தமுடையதாகும்.

2. அறன எரித்து சைத் தலை ஒருமெய்ப்பாடாக முன்னர்க் கூறி ஆல் து கெஞ்சழிதல் என கெஞ்சழிதலைத் தனி மெய்ப்பாடாகக் குறித்தலால் அதன் வித்து ரைக்குங்கடலை கெஞ்சழிதல் இல்லை யென்பது பெறப்படும்.