பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

20. கலக்க மென்பது, சொல்லத்தகாதன சொல்லுதல் :

இது :

'பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய

கையுளே மாய்ந்தான் கரந்து" (கலி 142}

எனவும்,

'பிறங்கிரு முந்நீர் வெறுமண வாகப்

புறங்காலிற் போக இறைப்பேன் முயலின் அறம்புனை யாகலு முண்டு' (கலி. 144)

எனவும் வரும். கலக்கமு நலத்தக நாடி (270)னதுவே என்னாது கலக்க மென்பதனை வேறுபெயர்த்து வைத்ததென்னையெனின் இக்காலத்து அதனினுரங்கு நிகழும் மெய்ப்பாட்டுக்குறிப்புள வல்ல தலைமகட்கென்பது" அறிவித்தற்கென்பது. இ ன் னு :ம் அதனானே தலைமகற்காயின் அதனினுாங்கு வருவதோர் கலக்க மும் உளதாமென்றது; அவை, மடலூர்தலே வரைபாய்தலே என்றற்றொடக்கத்தன; அது,

'மாவென மடலு மூர்ப பூவெனக்

குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகி னார்க்கவும் படுப

பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே' (குறுந் 17)

இதனுட் சாதல் எல்லையாகக் கூறியவாறு கண்டுகொள்க."

3. கலங்கிமொழிதல்' எனமேற்கடறிய மெய்ப்பாடு சொல்லுவனவற்றைத் தடுமாற்றக்தோன் தச் சொல்லுதல் கலக்கம்' என இங்குக் கூறியது சொல்லத தகாதன சொல்லுதலாகும்.

.ே தலைமகட்குக்கலக்கம் என்னும் இம்மெய்ப்பாட்டினைக்கடந்து இதன் மேற். பட நிகழும் மெய்ப்பாட்டுக்குறிப்பு உள்ளன அல்ல என்பதனை அறிவித்தற்குக் கலக்கம் என்ற மெய்ப்பாட்டினைத் தனியே பிரித்துரைத்தார் தொல் காப்பியர்.

7. அதனிஜாங்கு அக்கலக்கத்தின் மேலாக,

8. பிறிதுமாகும’ என்ற தொடர், சாதலை எல்லையாகக் குறித்தகை காண்க.