பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& âᎢ ← தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

பொருள் : இன்பத்தைவெறுத்தல் முதல்கலக்கம் ஈ ற க எண்ணப்பட்ட இருபதும் அன்புத்திணையில் தனிப்படர்மெலி வின் துனி நனவிளக்கும் மெய்ப்பாடுகளாகும்.

குறிப்பு : ஈற்றேகாரம் அசை, "கலக்கமும்' எ ன் ப த ன் உம்மை முன் ஒவ்வொன்றோடும் பிரிந்து சென்று ஒன்று ம் எண் ணிடைச்சொல்; அன்றி, எச்சம் எனினும், சிறப்பெனினும் தவறாகாது.

இனி, இதில் 111 இன்பத்தை வெறுத்தலாவது த னி ப் படர்மெலியுங்காதலர், கூட்டத்தின்முன்னும் உடனுறைபொழு தும் தமக்கினிதாயவற்றையே பிரிந்து தனித்தவழி வெறுக்குங் குறிப்பு. நிலவு, தென்றல், ஆரம், ஆயம், மாலை, கண்ணி முதலிய இன்பப் பொருள்கள் பிரிவாற்றாக் காதலர்க்குத் துன்ப மாதல் இம்மனவியல் பற்றியதாகும். தனித்த காதலர் இவற்றை வெறுத்துப்பழிக்கும் துறையில்வரும் செய்யுட்கள் பலவாதலின் ஈண்டு ஒன்றைக் குறித்தல் சாலும்.

'பாலு முண்ணாள், பந்துடன் மேவாள்.

விளையா டாயமொ டயர்வோள்.'

(குறுந் 396)

இவ்வடிகளில், முன் அவள் விரும்பிய பால் பந்து ஆயம் எல்லாம் கூடப்பெறாத்தலைவிக்கு வெறுப்பாயினம்ை விளக்கப் படுதல் காண்க.

(2) துன்பத்துப் புலம்ப'லாவது, தனிமை தா ங் க I க் காதலர் படர்மெலிந்திரங்கலாகும்.

'கரத்தலு மாற்றேணிந் நோயை, நோய்செய்தார்க்

குரைத்தலும் நானுத் தரும்." (குறள். 1162)

'காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே யுளேன்." (குறள். 1167)

எனும் குறள்கள் படர்மெலிந்திரங்கற் பாட்டுக்களாகும்.

(5) எதிர்பெய்து பரிதல்’ என்பது, உருவெளி கண்டிரங் குதல்.