பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உட கீஆக்

(15) 'அறனழிந் துரைத்தலாவது, அறனழிய வெறுப்பது போல வெறுத்துக் கூறல்,

'................ பிரிந்தோ ருள்ளா

தீங்குரல் அகவக் கேட்டும் நீங்கிய ஏதி லாளர் இவண்வரிற் போதிற் பொம்ம லோதியும் புனையல், எம்முந் தொடா அல், என்குவெ மன்னே,”

(குறுந். 191}

"யாரு மில்லைத் தானே கள்வன்,

தானது பொயப்பின் யானெவன் செய்கோ.,

(குறுந், 25;

  • அளித்தஞ்சல் என்றவர் நீப்பிற் றெளித்தசொல்

தேறியார்க் குண்டோ தவறு.” (குறள். 1154)

விளியுமென் இன்னுயிர், வேறல்லாம் என்பார் அளியின்மை யாற்ற நினைந்து.' (குறள். 1299)

இவையனைத்தும் காதல்மிகையால் தலைவி அறனழிய வெகு சொல் விளம்புங் காதலியல் குறிப்பதறிக. இன்னும,

"தற்றோள். நயந்து பாராட்டி

எற்கெடுத்திருந்த அறனில் பாய்க்கே’’

(ஐங்குறு. 385)

"ஊஉ ரலரெழச் சேரி கல்லென

ஆனா தலைக்கும் அறனில் அன்னை தானே யிருக்க தன்மனை" (குறுந் 262)

என வருவனவும் அறனழிந்துரைத்தலேயாகும். அறழிைவது போலக் கூறினும், அக்கூற்றுக்கள் கா தன்மையால் எழுதலால், மெய்யாக அறனழிக்கும் நோக்குடையனவாகா.