பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உச சீஆக

புரை யறத் தெளிதல் என்பது-கடன்மிக் கனவே என்ற வழிப் பரத்தைமை கண்டு புலவாது இதனைப்போற்றல் இல்லு ை மகளிர்க்கியல் பென்னும் அறத்தினானே' எனக் கூறிய வாறு கண்டுகொள்க.

இல்லது காய் த ைஎன்பது-தலைமகன்க ணல்லாத குறிப் பினை யவன் மாட்டு உளதாகக் கொண்டு காய்தல்.

'யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று” (குறள். கா.ச.ச.}

இதனுள் சொன்ன மாற்றத்தை வேறாகப் பொருள்கொண்டு இல்லாததனைச் சொல்லிக் காய்ந்தவாறு காண்க.

உள்ளது.வர்த்தல் என்பது - உள்ளதனை யுவர்த்துக் கூது தல். அது தலைவன் செய்கின்ற தலையளியை வெறுத்தல்.

'வெய்யாரும் வீழ்வாரும் வேறாகக் கையின்

முகையலர்ந் தன்ன முயக்கின் தொகையின்றே தண்டனி வைகல் எமக்கு' (கலித். :)

என வரும் .

புணர்த்துழி யுண்மை என்பது-புணர்ந்தவழி பூடலுள் வழி மறைத்துக் கூறாது அவ்வழி மனநிகழ்ச்சியுண்மை கூறுதல்.

'குளிரும் பருவத்தே ஆயினுந் தென்றல்

வளியெறியின் மெய்யிற் கினிதாம்-ஒளியிழாய் ஊடி யிருப்பினும் ஊர னறுமேனி கூடல் இனிதா மெமக்கு' (ஐந்தினை யைம். கல்)

என வரும்.

பொழுதுமறுப்பாதல் என்பது - தலைவன் வரும்பொழுது நியமமின்றி மறுப்பு வந்துழிப் பொழுதினைப் பற்றி நிகழும் மன நிகழ்ச்சி.

2. கடன் விக்கனவே என்றவழி என்றது, புறத்தொழுக்கம் ஒ ஆகுக் தல்ைவன் காலக் தாழ்த்து வக்தானாக, இவ்வளவு கேரம் எங்குத் தாழ்க்திருக்திச் தை

தலைவி வினவிய வழி பல்வேறு கடமைமிக்கனவாதலால் காலக் தாழ்த்தது சனத தலைவன் மறுமொழி கூறியவிடத்து என்பதாம்.