பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உல் உ தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே என்பது-இச்சொல்லப் பட்ட பத்தும் மேற்சொல்லப்பட்ட அழிவில் கூட்டப் பொருள் என்றவாறு. என்ற வழி நடுவணைந்திணைக்குரிய பொருள் என்றவாறு. }a از سوی

பேராசிரியம்

இஃது, அழிவில்கூட்டம் நிகழ்ந்த பின்னர் வருதற்குரிய மெய்ப்பாடு இவையென்கின்றது.

(இ-ள்.) இவ்வெண்ணப்பட்ட பதினொன்றும் மேற்கூறிய அழிவில் கூட்டமெனப்படும் (எ-து.)

செப்பிய பொருளென்பது அழிவில் கூட்டமன்றே, அதற்கு முற்படும் மெய்ப்பாடெட்டனையும் அழிவில் கூட்டமென்றது போல அதற்குப் பிற்படும் மெய்ப்பாட்டினையும் அழிவில் கூட்ட மென்பான் மேற்கூறிய அழிவில்கூட்டமே இவையுமெனக் கூறிய வாறு. எனவே, வரைந்தெய்திய பின்னர்த் தலைமகள் மனத்து நிகழ்வன இவையென்பது கூறினானாம். .

1. தெய்வமஞ்சலென்பது, தலைமகற்குத் தொழுகுலமாகிய? தெய்வமும் அவற்கு ஆசிரியராகிய தாபதரும் இன்னாரென்பது அவனானுணர்த்தப்பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத்தி னையஞ்சி ஒழுகுமொழுக்கம் அவள்கட் டோன்றும்; அங்ங்ணம் பிறந்த உள்ள நிகழ்ச்சியைத் தெய்வமஞ்சலென்றா னென்பது. மற்றுத் தனக்குத் தெய்வந் தன் கணவனாதலான் அத்தெய்வத் தினைத் தலைமகளஞ்சுதல் எற்றுக்கெனின், அலனின் தான் வேறல்லளாக மந்திரவிதியிற் கூட்டினமையின் அவனான் அஞ்சப்


عضت ------~ --م----ستِتے

1. அழிவில் கூட்டத்திற்கு எதுவாக முன்னர் நிகழ்ந்த மெய்ப்பாடுகள் முன்னைச் சூத்திரத்தில் விரித்துரைக்கப்பட்டன. அழிவில் கூட்டம் சிகழ்ந்த பின்னர் வருவதற். குரிய மெய்ப்பாடுகள் இச்சூத்திரத்திற் கூறப்படுகின்றன. மேற் கூறிய வரைக்தெய்துங் கூட்டித்தொடு தொடர்புடையனவே இச் சூத்திரத்தில் கூறப்படும் மெய்ப்பாடுகளும் என் பகன் சிறக்தபத்தும் செப்பிய பொருளே’ என்றார். இதனால் தலைவனை மணக் துகொண்டு கூடிய கூட்டத்தின் பின்னர்த் தலைமகள் உள்னத்து கிகழ்வன "தெய்வமஞ்சல் முதலிய இவை பதினொன்றும் என்பதாம்.

2. தொழுகுலம்-குலதெய்வம். புசை-ஒப்பு.