பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.பி.அ தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

கற்பொழுக்கையும் குறிப்பதாகும். பின்னுரைக்குப்பத்தும் என் பதைப் பத்து மெய்ப்பாடும் எனக் கொள்ளல் வேண்டும்.

இனித், 'தெய்வமஞ்ச'லாவது-சூள் பொய்த்தல் பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்கு மெனத் தலைவி அஞ்சுவதாம். தெய்வம் தொழாது கனவற். றொழுவது நல்லில்லாட்டியர் தொல்லற மாதலின், தெய்வம் பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக்கூறிய பெற்றியும் கருதற்பாற்று.

'மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்

கொடியோர்த் தெறுாஉம் என்ப; யாவதும் கொடிய ரல்லர்எம் குன்றுகெழு நாடர், பசைஇப் பசந்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே”

(குறுந் 87)

என்னும் கபிலர் செய்யுளும், தலைவி வழிபாடுகூறாது, அணங்கும் கடவுளை அஞ்சுதலளவே குறித்தமை அறிக.

'புரையறந் தெளிதல்-என்பது உயர்ந்த மனையறம் உணர்ந்தோம்பதல். புரை ஈண்டு உயர்ச்சிப்பொருட்டு.

'இதுமற் றெவனோ தோழி! துணியிடை

இன்னர் என்னும் இன்னாக் கிளவி

திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண் டிரே மாகிய நமக்கே.'

(குறுந். 181)

'தற்காத்துத் தற்கொண்டாற்பேணித் தகைசான்ற சொற் காக்கும் சோர்வின்மையே திண்ணிய கற்பின் பெண்மையற

மெனவுணர்ந் தொழுகுபவளே பெண்ணனெக் கூறப்படுதலானு மிவ்வுண்மை யறிக.