பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உச 登_ö及

றிவைபா ராட்டிய பருவமு முளவே, இனியே

நெஞ்சறை போகிய அறிவி னேற்கே" (அகம். 26)

என்னும் பாட்டில் மறைவில் நிகழ்ந்ததை மனைவி பின்னர் து தோழிக்கு எடுத்துரைக்கும் காதல்மாட்சியைக் கண்டு தெளிக.

புறஞ்சொல்மாணாக்கிளவி'-தலைவனைப் புறந்துாற்றும் புன்சொற்பொறாத தலைவி அதை வெறுத்து மறுப்பது.

'அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு யானெவன் செய்கோ என்றி, யானது நகையென வுணரே ாையின் என்னா குவைகொல் நன்னுதல் நீயே' (குறுந், 98)

என்னும் பாட்டில் தலைவனைப் புறம்பழித்த தோழியைத் தலைவி வெகுளு மிம்மெய்ப்பாடு விளக்கப்பெறுதலறிக.

புறஞ்சொல் நன்றாகாதென வெறுக்குத் தலைவியின் மறுப் புரை, புறஞ்சொல் மாணாக்கிளவி என்று கூறப்பட்டது.

இனி, முன் களவியலில் வேட்கை ஒருதலை உள்ளுதல்" என்னும் சூத்திரத்தில், வேட்கை முதல் சாக்காடீறாகக் கூறிய பத்தும் களவிற்குச் சிறந்தனவாதலின், அவை, "சிறப்புடை மர பினவை களவென மொழிப’’ எனக் குறிக்கப்பட்டன. அதுவே போல், இங்குக் கூறிய பத்தும் கற்பிற்குச் சிறந்தனவாதலின், "சிறந்த பத்தும் செப்பிய பொருளே' எனப்பட்டன. இன்னும், கரந்தொழுகலால் காமஞ் சாலாத களவினும், வரைந்து உலக றிய உடன் வாழ்ந்து ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றிக் கிழவனும் கிழத்தியும் வாழ்தலால் காமஞ்சான்ற கற்புச் சிறந் தது அச்சிறந்த வாழ்வு முன் கழிந்த களவின் பயனாமெனக் கற்பிய லிறுதியில் தெளிக்கப்பட்டிருத்தலால், அன்புத்திணையிற் சிறந்தது கற்புக் காதல், அதற்குச் சிறந்தன. இங்குக் கூறப்படும் மெய்ப்பாடு பத்தும், எனும் அமைவு தோன்ற, இப்பத்துமெய்ப் டாடுகளையும் 'சிறநத பத்தும் செப்பிய பொருளே எனக்கூறிய பெற்றியும் தேறற்பாலது. )a_سی {