பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಫಿ, $# தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

(இ-ள்.) ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மை யும், ஒத்த பிராயமும், ஒத்த உருவும், ஒத்த அன்பும், ஒத்த நிறை யும், ஒத்த அருளும், ஒத்த அறிவும். ஒத்த செல்வமுமெனப் பத்து வகைய தலைமகளொப்பினது பகுதி (எ-று).

இவை தலைமகற்கு மெய்ப்பாடெனப்படாவோவெனின் டடு மாயினும் அஃது ஒப்பினது வகையென்றதனானே தலைமகட்கே உரிமை கொணப்படும். குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னையெனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்: அதற்குத்தக்க ஒழுக்கங் குடிமை எனப்படும்; குடிப்பிறந்தாரது தன்மையைக் குடிமையென்றானென்பது; அதனை ஊராண்மையெனவுஞ் சொல்லுப. ஆண்மை புருடர்க்காம். அஃது ஆள்வினையெனப் படும். இது தலைமகட்கொப்பதன்றாலெனின், குடியாண்மை யென்புழி ஆண்மை யென்பது இருபாற்கும் ஒக்குமாதலின் அமை யுமென்பது. யாண்டென்பது ஒத்தவாறென்னையெனின், பன் tைர் யாண்டும் பதினாறியாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவமென்பது ஒத்தினுள் ஒப்பமுடிந்தமையின் அதுவும் ஒப்பெனவே படும்.' 'உருவு நிறுத்த காமவாயி லென்பது பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்த வழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பென்

நவாறு

இங்ங்னம் ஒதிய வகையான் இவை ஒன்பதாகலிற் பத்தாமா றென்னையெனின், காமவாயிலெனப்பட்ட இயற்கை யன்பு வடிவுபற்றி யல்லது தோன்றாமையானுங், குணம்பற்றித் தோன் றுவன செயற்கை யன்பாகலானும், உருவினை யன் பிற்கு அடை யாகக் கூறினா னாயினும் உருவு சிறப்புடைமையின் அதனை நாம் பகுத்தெண்ணிக் கொண்டாமென்பது. என்னை?

1. பன் னிர் யாண்டும் பதினாறியாண்டும் என யாண்டின் எண்ணிக்கைவேறு படினும் முறையே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவம் ஒத்தமையின் ஒப் பாயிற்று.