பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認。霹。譯 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

உ-ம். 'அவனுந்தான்,

ஏன லிதனத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங் கானக நாடன் மகன்' (கலி 39)

என்பது பிறப்பொப்புமை

'உள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய

வினைமுடித் தன்ன இனியோள் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே' (நற்.3)

என்பது தலைமகன் தனது இல்லறத்தைத் தலைமகள்மேல் வைத்துச் சொல்லினமையிற் குடிமையாயிற்று.

'கேள்கே டுன்றவுங் கிளைகு ராரவுங்

கேளல் கேளிர் கெழி இயின ரொழுகவும் ஆள்வினைக் கெதிரிய ஆக்கமொடு புகல்சிறந்து"

(அகம். 93)

என்புழி, இன்னகாரணத்திற் பிரிந்துபோந்து வினைமுடித்தன மாயினும் அவளை முயங்குகஞ் சென்மோ’’ என்றமையின் தன் ஆள்வினைக்குத் தக்க பெண்மையான் அவள் ஆற்றியிருந் தாளென்பது உங் கருதிய கருத்தினாற் காமக்குறிப்புப் பிறந்த மையின், அஃது ஆண்மையாயிற்று.

'என்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின்

மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண்”

(கலி. 18}

என்பது பாண்டு

'முல்லை முகையு முருந்துநிரைத் தன்ன

பல்லும் பனைத்தோளும் பேரம ருண்கண்ணும் நல்லேன்யா னென்று நலத்தகை நம்பிய சொல்லாட்டி நின்னோடு சொல்லாற்ற கிற்பாரியார்' (கலி. 108)

என்பது உருவு.