பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா க கதி

நகை முதலானவற்றுக் கேதுவாம் எள்ளல் முதலாக விளையாட் உறாக முன்னெடுத்தோதப்படுகின்றன’’ என்பதாம்."

இச்சூத்திரத்தின் செம்பொருள் இதுவாகவும், பேராசிரி யரும் பிறரும் ஆன்ற தமிழ்மரபும் தெளிசொற் குறிப்பும் முரண உரைசுறி மயங்க வைப்பர். பேராசிரியர் 'சுவைப் பொருளும் அப்பொருள் விளைக்கும் சுவையுணர்வும், அவ்வுணர்வால் தோன்றும் உள்ளக்குறிப்பும், இக்குறிப்பின் வழி உடம்பின்கண் வரும் வேறுபாடாம் விறலுமாக நான்கெண்ணி அவற்றைச் சுவையெட்டோடும் கூட்டி ஒன்று நான்கு செய்துறழ, முப்பத்திரண்டாம்” என அதுமானிப்பர். இன்னும் 'பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருள்” என்பதற்கு, 'நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமநுகரும் இன்ப விளை யாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும்' எனப் பொருள்கூறி, கண்ணிய புறனே நானான்கென்ப' என்பதற்கு 'அவை கருதிய பொருட்பகுதி பதினாறாகி யடங்கும், நாடக நூலாசிரியருக்கு', என முடிப்பர். இதில் பொருள் முப்பத்திாண்டென ஒருங்கெண்ணிய பிறகு அவை கருதிய பொருட்பகுதி எனப் பிரித்துப் பதினாறெனச் சுட்டுமாறென்னை? பொருள்கள் கருதிய பொருட் பகுதி' என்பது பொருளில் வெற்றுரையாகும். மேலும் எண்ணான்கு பொருளும் ஒராங்கே ஒருங்கெண்ணப்படுதலின், அவை ஒருதரப்பொருளாதல் ஒருதலை. அதற்கு மாறாக, அவற்றைச்சுவையூட்டும் புலி முதலிய புறப்பொருள்வேறு, அப்பொருள் விளைக்கும் உணர்ச்சிவகைவேறு, உணர்ச்சியால் எழும் உள்ளக்குறிப்பு வேறு. அக்குறிப்பால் நிகழும் உடற்குறியாம் விறல் வேறு எனத் தம்முள் ஒவ்வா நால்வகையாய் உறழப் பிரித்தல் இங்குத் தொல்காப்பியர் கருத்தாமாறில்லை. அன்றியும் எண்ணான்காமவை குறியால் நந்நான்கோரினமாய்க் கண்ணிய புறனே எண்வகை ஆவதை விட்டு, பதினாறாவதெப்படி ? புறப்பொருளும் அகவுணர்வும் ஒன்றாமேல், உணர்வெழுப்பும் குறிப்பையும் அதனுடன் நிகழும் விறலையும் வேறுபடுத்துவானேன் ? அன்றியும் உணர்வூட்டும் புறப்பொருள் ஒன்றும் இல்லாமலே எண்ணி யாங்கே மெய்ப் பாட்டுணர்வுகள் உள்ளத் தெழுமாதலின், எண்வகைமெய்ப்

2. இங்ங்ணம் கொள்பவர் இளம்பூரணர்.