பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா க శ్రీ ఛ్సీ

ஒத்தும் ஆ த பெயரான் மெய்ப்பாட்டியலென்றாயிற்று' எனப் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும்.

மக களது அகவாழ்வும் புறவாழ்வும் ஆகிய உலகியல வழக லே புலப்பட்டுத் தோன்றும் இம் மெய்ப்பாடுகளைப் புனைநா துரை வகையாகிய நாடக வழக்கிறகும் புலனெறி வழக்கமாகிய செய்யுள வழக்கிற்கும் உறுப்பாகக் கொள்ளுதல் தொன்றுதொட்டு வரும் தமிழிலக்கண மரபாகும். இம்மரபினை புளங்கொண்ட தொல் காப்பியனார், இம்மெய்ப்பாடுகளைப் புலனெறி வழக்கமாகிய செய்யுளுக்குரிய உறுப்புக்களுள் ஒன்றாகக கொண்டு இவ்வியலில் விரிதது விளக்குகின்றார். இவ்வியல் இருபத்தேழு சூததிரங்களால் இயன்றதாகும். இவ்வியலின் முதலிரண்டு சூத்திரங்களும், மெய்ப்பாடுகளைக் குறித்து நாடகத் தமிழ் நூலாசி கொண்ட கோட்பாட்டினைப் பிறன் கோட் கூறல் என்னும் உத்தி வ கையால் எடுததுரைப்பன என்பது இளம்பூரணர் பேராசிரியர் ஆகிய முன்னை யுரையாசிரியர்களின் கருததாகும்.

நூற்பா க

இது, நாடகத் தமிழ் நூலார் மெய்ப்பாடு பற்றி வகுத்துக் கொண்ட கூறுபாட்டின விரியினையும் வகையினையும் எடுத்துரைக் கின றது.

( இ- ள்.) உலக மக்கள் கண்டும் கேட்டும் இன்பதுகரும் இன ப விளையாட்டின் கண்ணே தோன்றிய முப்பத்திரண் டு பொருள்களையுங் குறித்து அவற்றின் புறத்து நிகழும் பொருள்கள் பதினா றென்று சொல்வர் (நாடகத் தமிழ் நூலோர்) எ-மு.

பண்ணை எனபது விளையாட்டு என்ற பொருளில் வழங்கும் உரிச்சொல்லாகும். 'கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு’ (உரியியல்-உங்) என்பது தொல்காப்பியம். விளையாட்டு என்னும் பொருளுடைய பண்ணை என்னும் இச்சொல் விளையாட்டினையுடைய கூட்டம் என்ற பொருளில் இங்கு ஆளப் பெற்றது. பண்ணையுடையது பண்ணை யென்றாயிற்று என்பர் இளம்பூர ண ர். கண்ணுதல் - கருதுதல்.

முடியுடை வேந் தரும் குறுநில மன்னரும் முதலாயினார் நாடக மகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காமநுகரும் இன்ப