பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் கல்

மெய்ப்பாடு முறையே அறத்தான் வரும் செல்வம், கல்வியான் எய்தும் அறிவு, கற்புறு காதற்கூட்டம், திளைத்தற்குரிய துரயவிளையாட்டு இந்நான்கானும் வரும் மகிழ்ச்சியாகும். சிருங்காரத்தை இவ்வுவகையோடு ஒப்பிட ஒல்லாமை கருதி, உவகை நாலில் ஒன்றாய தாய காதற் கூட்ட மலிவோடு உறழ் வித்து அமைதி காட்ட முயல்வர் பழைய உரைகாரர். உயர் திணைக் குரிப்பொருளாய் இருதலை ஒருவயின் ஒத்த அன்புக் கூட்டத் துய மகிழ்ச்சியும், பிறனில் பெட்டல் முதலிய தீமையிற் lராக் கற்பொடு படுஉம் கடப்பாடு கருதாக் கழிகாமத் திளைப்பும் தம்முள் ஒவ்வாமை வெளிப்படை. இனி, ஆசியம் நால்வகை நகையை முற்றிலும் ஒவ்வாமையும் தெற்றெனத் தெளியப்படுவதாகும். கருணை அருள், அதாவது அணியா மல்லால், அழுகையாகாமை தேற்றமாம். அயலார் அல்லலுக்கு இரங்குவது அளி அதாவது கருணையாம்; அழுகையோ தம்பால் தாங்கரும் இழிவு இழவு தளர்வு வறுமைகளால் வருந்துதலாகும். ஏமப் புண்ைசுடும் இரெளத்திரம் தனக்குத் தீங்கிழைத்த பிறர் மாட்டுச் செல்லும் சினமாம். உறுப்பறுதல் முதல் கொலை வரை நான்கும் தன்னைச் செய்யினும் பிறரைச் செய்யினும் ஒப்ப நிகழும் மனவுணர்வு வெகுளியாகும். வீரம் என்பது பெருமிதம் நான்கனுள் ஒன்றாம் தறுகண்மையில் அடங்கும். பேராண்மைப் பெற்றியொடு குறையா இறவாச் சிறப்பீயும் கல்வி புகழ் கொடைகளான் எய்தும் மலிவொடு பொலியும் பெருமிதம், கேவலம் வீரத்தின் வேறாதல் வெளிப்படை. குற்சை என்பது அருவருப்பு. இதனை எனைத்து வகையானும் தமிழ்ச் சான்றோர் செய்யுளில் எஞ்ஞான்றும் உயர்ந்த சுவைதரும் மெய்ப்பாட்டுப் பொருளாகக் கொண்டிலர். அற்புதம் மருட்கை வகையில் ஒன்றாயடங்கும். சாந்தம் பிறிதுணர்வு எதுவும் அற்ற வெறுநிலை ஆதலின் அது மெய்ப்பாடாகாமை தேற்றம். அதனை , உளத்துரனால் மலரும் உணர்வான நடுவுநிலை யெனும் தமிழ்ச் செய்யுட் பொருளொடு ஒப்பதுபோலக் கூறுவர் உரைகாரர். சமனிலை அதாவது சாந்தி, உணர்வும் குறிப்பும் ஒன்றுமற்ற வெறுநிலை; எனவே அன்மைப்பொருளது. நடுநிலையோ தகுதி எனும் அறிவுணர்வாகும்; அதனாலது நேர்மை சுட்டுமுணர்வுப் பொருட்டாம். இவை தம்முள் இயல் ஒவ்வாமை கண்கூடு; அந்நடுவு நிலையை "அப்பாலெட்டு மெய்ப்பாட்டு' வகையில் அடக்காமல் பின் பிறிதொருபாலாம் முப்பத்திரண்ட