பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா ச

ஆண்பிரி பெண்மைப் பேடிக் கண்ணும் களியின் கண்ணுங் காவாலி கண்ணும தெளிவிலார் ஒழுகும் கடவுளார் கண்ணும் ஆரியர் கூறுந் தமிழின் கண்ணும் காரிகை யறியாக் காமுகர் கண்ணும் கூனர் கண்ணும் குறளர் கண்ணும் ஊமர் கண்ணுஞ் செவிடர் கண்ணும் ஆன்ற மரபின் இன்னுழி எல்லாந் தோன்றும் என்ப துணிந்திசி னோரே...'

என இவ்வகையெல்லாம் உளவெனச் செயிற்றியனார் ஒதுதலின் அவை நான்காகியவாறு என்னையெனின், முடவர் செல்லுஞ் செலவு எள்ளுதற் பொருண்மை யாயிற்று, மடவோர் சொல்லுஞ் சொல் மடமைப்பொருண்மை யாயிற்று; கவற்சி பெரிதுற்றுரைப்போர் கூற்றுப் பேதைமையாயிற்று; குழவிகூறு மழலை இளமைப் பொருளாயிற்று; ஏனைய வெல்லாம் இவற்றின்பாற் படுதல் காண்க. புணர்ச்சி நிமித்தமாகக் கூற்று நிகழ்ந்துழி வரும் நகை இளமை என்பதனாற் கொள்க. இப் பொருண்மை செயிற்றியத்தில் வலியோன் கூறும் மெலிவு' என்பதனாற் கொள்க."

மடம் என்பதற்கும் பேதைமை என்பதற்கும் வேறுபாடு என்னையெனின், மடம் என்பது பொருண்மை யறியாது திரியக் கோடல், பேதைமை யென்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக் கோடல்.’

எள்ளல் இளமை எனப் பொதுப்பட்டு நின்றமையால் தன்மாட்டு நிகழும் வழியுங் கொள்க."

2. நகைபடுபொருள்கள் முடவர் செல்லுஞ் செலவு முதல் ஊமச் செவிடர் ஈறாகச் செயிற்றியத்துட் பலவாறாக விரித்துரைக்கப்படினும் அவையெல்லாம் தொல்காப்பியனார் வகைப்படுத்துணர்த்திய எள்ளல், இளமை, பேதமை, மடன் என்னும் இக்கான்களுள் அடங்குமாற்றினை விளக்குவது இவ்வுரைப்பகுதியாகும்.

8. பொருளியல்பினைத் தேர்ந்துணரமாட்டாமை மடன் எனவும், சொல்லிய. தனைத் தெளிங் துணர மாட்டாமை பேதைமை எனவும், இவற்றிடை. யேயமைக்த வேறுபாடு தெரிந்துணர் க என்பதாம்.

4. இங்கு க.கைச் சுவைக்குக் காரணமாகிய எள்ளல், இளமை முதலிய பொருள்களின் கிலைக்களம் பிறர் கண் என்றோ தன் கண் என்றோ கூறப்படாது பொதுப்படகின்றமையால் இவற்றுக்குப் பிறர் கண்ணும் தன் கண்ணும் என இரண்டிட: மும் கிலைக் களமாதல் கொள்க என்பதாம்.