பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; இச் தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

'திறனல்ல யாங்கழற யாரை நகுமிம்

மகனல்லான் பெற்ற மகன்' (கலி.86)

என்பதும் அது.

அங்ஙனம் மகன் சிரித்தவழித் தாய்க்கு நகை தோன்றிற் றேல் அது பிறரிளமை பொருளாக நகை தோன்றிற்றாம். நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் (அகம். 16 என்பது பிறரிளமை பொருளாக நகை பிறந்தது.

'நகைநீ கேளாய் தோழி' (அகம். 248)

என்பது தன் பேதைமை பொருளாக நகைபிறந்தது; என்னை? தான் செய்த தவற்றிற்குத் தாய் தன்னை வெகுண்டது. தனக்கு நகையாகக் கொண்டமையின்,

"நகையா கின்றே தோழி

மம்மர் நெஞ்சினன் தொழுதுநின்றதுவே' (அகம், 59)

என்பது பிறன் பேதைமை பொருளாக நக்கது.

'தும்மொடு நக்க வால்வெள் ளெயிறே" (குறுந் 168)

என்பது தன் மடத்தான் நகை தோன்றிற்று; என்னை? நீயிர் கூறியதனையே மெய்யெனக்கொண்டு மகிழ்ந்து நக்கன மென்றமையின்.

'குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்

சிறக்கணித்தாள் போல நகும்' (குறள் 1095)

என்பதும் அது.

"நாம்நகை யுடையம் நெஞ்சே நம்மொடு தான்வரு மென்ப தடமென் றோளி' (அகம். 121)

எனப் பிறர்மடம் பொருளாக நகை தோன்றிற்று. பிறவும் அன்ன.

இவ்வோதப்பட்டவற்றுக்கெல்லாம் உவகை உரித்து, உள்ளப்பட்ட நீண்க் நான்கு. என்றதனான் உள்ளத்தோடு