பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: தொல்காப்பியம்-பெய்ப்பாட்டியல்

"ஐயோ எனின்யான் புவியஞ் சுவலே

அனைத்தனன் கொளினே அகன்மார்பெடுக்க ல்லேன் என்போற் பெருவிதுப் புறுக நின்னை இன்னா துற்ற அறனில் கூற்றே திரைவளை முன்கை பற்றி வரைநிழற்சேர்க நடத்திசிற் சிறிதே.’ (புறம். உருரு)

இது இழிவுபற்றி வந்த அழுகை.

ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க. (ருத்

பேராசிரியம்

இது முறையானே அழுகை யென்னுஞ் சுவையினைப் பொருள்பற்றி உணர்த்துதல் நுதலிற்று.

(இ- ள். இளிவும் இழத்தலும் அசைதலும் வறுமையு மென இந்நான்கு பொருள்பற்றித் தோன்றும் அவலம் (எ . து.)

இளிவென்பது பிறரான் இகழப்பட்டு எளியனாதல். இழவென்பது தந்தையுந்தாயு முதலாகிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவென்பது பண்டை நிலைமைகெட்டு வேறொருவாறாகி வருந்: துதல். வறுமையென்பது போகந்துய்க்கப்பெறாத பற்றுள்ளம்." இவை நான்குத் தன்கண் தோன்றினும் பிறன்கண் தோன்றினும் அவலமாமென்பது. எனவே, இவையும் எட்டாயின. விளிவில் கொள்கை, கேடில் கொள்கை; அங்ஙனங் கூறிய மிகையானே அழுகைக் கண்ணிர்போல உவகைக் கண்ணிர் வீழ்தலும் உண்டு. அதனையும் அழுகைப்பாற் சார்த்தி உணரப்படும்.

'எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி அடித்தென வுருத்த தித்திப் பல்லு ழ் நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு கூர்நுதி மழுங்கிய எயிற்றள் ஊர்முழுது துவலுநிற் கானிய சென்மே” (அகம். 176)

கி ை கிலம் கீதொடு சேர்த்தல், கயவர் மனக்தபப் படைத்தல், கொலைக்களம், கோட்டம், கொன் முனைக்கவற்சி, அலைக்கண்மாறா அழுகுரல்ரவம் &r &টা ৪া அசைவின் கண்தும், குறைபடு பொருளொடு குறை டெய்தல், சார் . பிழைத்துக் கலங்கல் என்பன வறுமைக்கண்ணும் அடங்குமாறு அறிந்து அடிக்கிக்கொன் க,

1. எனவே பொருளில்லாமை வறுமையன்று என்பதாம்.