பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா டு :: -

என்பது, பரத்தையை நீ யெள்ளினையென்று அது வருகின்றா ளென்று தலைமகற்குச் சொல்லியதாகலின் இது தன்கட்டோன்றிய இளிவரல் பொருளாக அவலச்சுவை பிறந்தது. “கயமல ருண் - கண்ணாய் காணா யொருவன்’ (கலி. 47) என்னும் பாட்டினுள் "தானுற்ற நோயுரைக்கல்லான் பெயருமன் பன்னாளும்” எனத் தலைமகன் இளிவந்தொழுகுவது காரணமாகச் சேயேன்மன் யானுந் துயருழப்பேன்’ என்றமையின் இது பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாக அவலச்சுவை பிறத்தது. இது கருனையெனவும்படும்.”

'மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே' (புறம், 249)

என்புழிக் கணவனை யிழந்தாள் அவற்குப் பலிக்கொடை கொடுத் தற்கு மெழுகுகின்றாளைக் கண்ணிரே நீராக மெழுகுகின்றாளென்றமையின் இது தன்கட் டோன்றிய இழவுபற்றிப் பிறந்த அவலச் சுவையாயிற்று.

"ஐயோ வெனின் யான் புலியஞ் சுவலே (புறம். 256)

என பதும் அது.

பின்னொடு முடித்த மண்ணா முச்சி' என்னும் பாட்டினுள்,

'அணங்குறு கற்பொடு மடங்கொளச் சாஅய் நின்நோய்த் தலையையும் அல்லை தெறுவர என்னா குவள்கொல் அளியள் தானென என்னழி பிரங்கு நின்னொடியானும்” (அகம், 73)

என்றவழித் தலைமகன் பிரிவிற்குத் தோழி படர்கூர்ந்தாளெனச்"

சொல்லினமையின் அது பிறன்கட் டோன்றிய இழவுபற்றி

அவலம் பிறந்ததாம்.

2. என்றமையின் எ ன்த் தோழி கூறின கையின் ,

  • பிறன் கண் தோன்றிய இளிவரல் முதலாயின பொருளாகத் தோன் னும் அவல :

கலையாகிய இது கருணை யெனவும் வழங்கப்படும் என்பதாம்.

4. பலிக்கொடை . வழிபாட்டிற்கொடுக்கப்படும் படைப்புப் பே: சூன்.

5. படக் கூர்தல் துன்பமிகப்பெறுதல்.