பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - w w * بييتي இமய்ப்பாட்டியல்-து ரியா சி #

இது தன்மாட்டு வருத்தத்தானே இழிப்புப் பிறந்தது. மென்மை என்பது- நல்குரவு.

'அறஞ்சாரா நல்குர iன்றதா யானும் - - பிறன்போல நோக்கப் படும்.' (குறள். கசென)

'இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொற்பிறக்கும் சோர்வு தரும்.” (குறள் .ச0சச)

என வரும்.

இன்னும் யாப்புற என்பதனான் இழிக்கத்தக்கன பிறவுங் கொள்க. அவை நாற்றத்தானும் தோற்றத்தானும் புல்லியன. இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வந்தவழிக் காண்க. (*)

பேராசிரியம் இது, மூன்றாம் எண்ணு முறைமைக்கனின்ற இளிவரல் கூறுகின்றது.

(இ- ள்.) முப்பும் பிணியும் வருத்தமும் மென்மையுமென நான்கு பொருள் பற்றிப் பிறக்கும் இனிவரல் (எ-று.)

வருத்தமெனினும் முயற்சியெனினும் ஒக்கும். 'யாப்புற வந்த என்பது திட்பமுறவந்த என்றவாறு. அங்கனங் கூறிய மிகையானே வீரமுதலாயினபற்றியும் இளிவரல் பிறக்கும் என்ற வாறு. இவையும் முன்னையபோலத் தன்கட் டோன்றுவனவும் பிறன்கட் டோன்றுவனவும் பற்றி எட்டாதலுடைய வென்பது கொள்க.

'தொடித்தலை விழுத்தண் டுன்றி நடுக்குற்று

இருமிடை மிடைந்த சிலசொல்

பெருமூ தாளரே மாகிய வெiமக்கே.' (புறம்.243)

என்பது தன்கட் டோன்றிய மூப்புப்பொருளாக இளிவரல் பிறந்தது; என்னை? இளமைக்காலத்துச் செய்தன செய்யமாட்டாது இளிவந்தனம் இக்காலத்து என்றமையின்."

1. இனமைக் காலத்துச் செய்தன. இக்காலத்துச்செய்யமாட்டாது இளிவந்தனம் என்றமையின் இது தன் கண் தோன்றிய மூப்புப்பொருளாக இளிவரல் பிறந்தது.