பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா சு #க்

"மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்

முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல' (அகம். 5) என்பதும் அது."

'மூத்துத்தலை யிறைஞ்சிய நின்னோடு யானே

போர்த்தொழில் தொடங்க நானுவல் அதனான்'

என்பது பிறன்கட் டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது.'

'இமயமுந் துளக்கும் பண்பினை

துணையிலர் அளியர் பெண்டிரிஃ தெவனோ'

(குறுந். 158) என்பது தன்கட் டோன்றிய பிணிபற்றி இளிவரவு பிறந்தது; என்னை? மலையைத்துளக்கும் ஆற்றலையுடையாய் காமப்பிணி

கர்ந்தோரை அலைப்பது நினக்குத் தகுவதன்றென இளிவந்து வாடைக்குக் கூறினமையின்."

'குணகடற் றிரையது பறைதபு நாரை

திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆரிரைக்கு அணவந் தாஅங்குச் சேயள் அரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே" (குறுந். 128)

என்பது நெஞ்சினை வேறு நிறீஇக் கூறினமையிற் பிறன்கட் டோன்றிய பிணியெனப்படும்.

இதனுட் சேய ளரியோட் படர்தி' என்றமையின் இது பிறன்கட் டோன்றிய வருத்தமும் வந்ததாயிற்று.

2. தலைவனை நோக்கித் தலைவி கூறுவதாக அமைந்த இக்கற்றில் தன் கண்

தோன்றிய மூப்புப்பொருளாக இளிவரல் வந்தது. 8. இளையவீரன் தன்னினும் முதுமையுடைய வீரனை கோக்கிக் கூறுவதாக

  • அமைந்த இக் கூற்றில் பிறன் கண் தோன்றிய முதுமை பொருளாக இனிவர ல் வந்தது. "இளிவந்து மழைக்குக் கூறினமையின்' என்றிருத்தல் வேண்டும், 5. தலைவன் தனது கெஞ்சினைத் தன்னின் வேறாக கிறுத்தி அதனை நோக்கிக் கூறினமையின் இது பிறன் கண் தோன்றிய பிணிபொருளாகத் தோன்றிய இளிவரலாகும்.