பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா எ இதி

வழக்கினுள் நின்றவாறு நில்லாமற் றிரித்து வேறுபடுத்து வருவதென்றவாறு. இவையுமெல்லாம் மேலனபோலத் தன்கட் டோன்றினவும் பிறன்கட் டோன்றினவுமென எட்டாதலுடைய.

"மலர்தார் மார்ப னின்றோற் கண்டோர்

பலர் தில் வாழி தோழி யவருள் ஆசிருட் கங்குல் அணையொடு பொருந்தி ஒர் யா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே' (அகம். 82)

என்பது தன்கட் டோன்றிய புதுமைபற்றிய வியப்புப் பிறந்தது, என்னை? தன்கருத்து வெளிப்படாது தன்மெய்க்கட் டோன்றிய புதுமையைத் தலைவி வியந்தாள்போலத் தோழிக்கு அறத். தொடு நின்றமையின்.

'மந்தி நல்லவை மருள்வன நோக்கக்

கழைவளர் அடுக்கத் தியலி யாடுமயில் விழவுக்கள விறலியில் தோன்றும் நாடன்' (அகம், 82)

என்றவழிப் பண்டு ஒருகாலுங் கண்டறியாதபடி ஆடிற்று மயிலென்றமையிற் பிறபொருட்கட் டோன்றிய புதுமை. யாயிற்று.

'நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவு இன்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே' (குறுந். 3)

என்பது, பெருமைவியப்பு: என்னை? கருங்கோற் குறிஞ்சிப்

பூக்கொண்டு பெருந்தேன் இழைத்தாற்போல வழிமுறை முறை யாற் பெருகற்பாலதாகிய நட்பு மற்றவனைக் கண்ணுற்ற

வனவுமாகிய பொருள்கள் காண்போது அறிவினை வேறுபடுத்தி வியப்பினை வினைத்தலின் 'மதிமை சாலாமருட்கை என அடைபுணர்த்தே தினார். பதிகை சாலாமருட்கை எனவே மதியை சான்றோருள்ளத்து இவை பற்றி மருட்கை தோன்றுதற்கு இடனில்லையென்பதாம்.