பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藻参 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

என்பதனுள் அணங்கும் விலங்கும் பொருளாக அச்சம் பிறத்தல் இயல்பென்பது கூறியவாறாயிற்று.

  • ஒரு உநீயெங் கூந்தல் கொள்ளல்யா நின்னை

வேரூஉதுங் கானுங் கடை.' இது கள் வர் பொருளாக அச்சம் பிறந்தது; அவனைக்"கள்வர்பாற் சார்த்தி உரைத்தமையின்.

'சகுத்துமே னோக்குறின் வாழலே மென்னும்

கருத்திற்கை கூப்பிப் பழகி-யெருத்திறைஞ்சிக் கால்வண்ண மல்லாற் கடுமான்தேர்க் கோதையை மேல்வண்ணங் கண்டறிய வேந்து.' (இ. வி.ப.124) இஃது, இறைபொருளாக அச்சம் பிறந்தது.

(கலி 87)

என்னை?

பினங்காத அச்சமென்னாது 'சாலா அச்ச மென்ற மிகை யான் இந்நான்குமேயன்றி ஊடன் முதலியனவும் அச்சத்திற்குப் பொருளாமென்று கொள்க."

'சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின்

ஆணை கடக்கிற்பார் யார்' (கலி. 18) என்பது, புலவி பொருளாக அச்சம் பிறந்தது.

'அணிகிளர் சாந்தி னம்பட் டிமைப்பக்

கொடுங்குழை மகளிரி னொடுங்கிய விருக்கை

(அகம்.235)

'அச்சா றாக வுணரிய வருபவன்

பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல்' (கலி.75) زبانی )

என வருவனவும் அவை. பிறவும் அன்ன.

பாரதியார் கருத்து :-இஃது, அச்சவகை நான்கும் அவற்றினியல்பும்

உணர்த்துகிறது.

பொருள் :-வெளிப்படை : கூறாமலே விளங்கும்.

  • * * * * * * * * * * * * * *

3. "அவனை’ என்றது தலைவனை. 4. பினங்குதல் கிரம் பாத அச்சம் எனவே ஓரொருகால் பிணங்குதல் பற்றியும் அச்சம் தோன்றும் என்பது பெறப்படுதலின் பிணங்குதலாகிய ஊடல் முதலியன் அச்சத்திற்குப்பொருளாம் என்றார்.