பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா அ تي يجي

குறிப்பு :- காட்சியளவில் காரணங் காணொனா விடத்துக் கடவுள்மேல் ஏற்றிக்கூறு முலகியலில், துன்புறுத்தும் சூர் அதாவது இயவுளாக் கொள்வதை அனங்கென்பது பழ வழக்கு. கள்வர், அலைத்துப்பொருள் வெளவுவோர். இறை' குற்றங்கடிந்தொறுக்கும் வேந்து. குடிக்குற்றம் ஒறுத்தோங்கும் அறம் பிறர்க்கின்மையின் மிறைகடியும் ஒறுப்பச்சம் தரும் வேந்தைத் தம்மிறை' எனச் சுட்டிய பெற்றியறிக. அச்ச ஏது வாம் தம் மிறையை (தவற்றை) யும், அதற்குரிய ஒறுப்பாலச்சுறுத்தும் தம் இறையையும், ஒருங்கே 'தம்மிறை' எனச் சுருக்கி இரட்டுற மொழிதலாகச் செவ்வியுணர்க."

இனி, பிணங்கல்-மாறுபடல்; நெருங்குதலுமாம். காரணத்தோடு மாறுபடுவதோ நெருங்குவதோ கூடுவதெதுவும் அஞ்சப் படாதாதலின், பிணங்கல் சாலா அச்சம் நான்கே' என்றிந் நான்கன் பொதுவியல் விளக்கப்பெற்றது. எனவும், ஏகாரங்களுள் முன்னவையும் எண்குறிக்கும்; சற்றேகாரம் தேற்றம், அசையுமாம். (3)

ஆய்வுரை இஃது, அச்சத்திற்குரிய பொருள் வகை புணர்த்துகின்றது.

(இ-ள். அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறைவன் என மாறுபாடுதலில்லாத அச்சம் நால்வகைப்படும். எ-று.

அணங்கு என்பன எதிர்ப்பட்டாரை வருத்தும் இயல்பின வாகிய பேய்பூதம் முதலியன. விலங்காவன அரிமா, புலி முத வாகவுள்ள கொடிய விலங்குகள் , கள்வராவார் சோர்வு பார்த்துப் பிறரை வஞ்சித்துக் கொடுந் தொழில்புரிவோர். தம் இறை யென்றது, தந்தை, ஆசிரியன், அரசன், வழிபடு தெய்வம் என இவ்வுரிமை முறையிற்பணிகொண்டு தம்மை ஆளும் தலைவரை. அஞ்சத்தக்கனவாகிய இவற்றைக் கண்ட நிலையில் உள்ளம் நடுக்க முற்று அஞ்சுதல் இயல்பு. இவ்வாறு நடுங்காது பிணங்கி எதிர்நிற்பாரது

SSASAS SS SAAAAAS AAAASS

1. “தம்மிறை என வரும் தொல்காப்பியத்தொடர் இரட்டுற மொழிதலால் அஞ்சுதற்கு ஏதுவாகிய தம் இறையையும் தம் மிறையையும் குறித்தது எனக் கொண்ட கயம் பாராட்டத்தக்கது. தம் இறை-தம்மை ஆளும் வேந்தன். தம்மிறை: தாம் செய்த பெருங்குற்றம். பெருங்குற்றம் புரிந்தோ குள்ளத்தில் அவர்தம் செய்த குற்றமே அச்சத்தினைத் தோற்றுவிக்கும் என்னும் இக் துட்பம் தம்மிறை என்னும் பகுப்பினால் இனிது புலனாதல் காணலாம்.