பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蘇蒂 தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

உள்ளத்தில் அச்சத்தோன்றாது என்பார், பிணங்கல் சாலா அச்சம்' என அடைபுணாத தோதினார். அச்சத்திற்குக் காரண மாகிய இவை நான்கும் தன் கண் தோன்றுவன பிறர் கண் தோன்று வன என இருபாற்படாது பிறிது பொருள் என ஒருபாற்பட்டே நிற்பனவாம்.

இளம்பூரணம்

க. கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்

சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே. என்-எனின். பெருமிதமாமாறும் அதன் பொருண்மையும் உணர்த்துதல் துதலிற்று.

(இ-ள். கல்வியானுந் தறுகண்மையானும் புகழ்மையானும் கொடையானும் பெருமிதம் நால்வகைப்படும் என்றவாறு.

இவை நான்கும் பிறனொருவனின் மிகுத்தவழிப் பிறக்கு மகிழ்ச்சி பெருமிதம் என்று கொள்க’.

பெருமிதமாவது-தன்னைப் பெரியனாக நினைத்தல்.

'உறுசுடர் வாளோ டொருகால் விலங்கின்

சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டாய்- எறிசுடர்வேல் தேங்குலாம் பூந்தெரியல் தேர்வந்த நின்னொடு

பாங்கலா வீரர் படை." (புறப். வெ. எ. அ) இது வீரம்பற்றி வந்தது. பிறவு மன்ன. (க)

Guirirsstiftu út

இஃது ஆறாம் எண்ணு முறைமைக்கண் நின்ற வீரம் உணர்த்துதல் நுதலிற்று.

(இன்.) கல்வியுந் தறுகண்மையும் புகழுங் கொடையு மென்னும் நான்கும் பற்றி வீரம்பிறக்கும் (எ-று.)

இச்சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமிதமென்றெண்ணினான்; என்னை? எல்லாரொடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல்

1, இசைமை என்பது பேராசிரியருரையிற்கண்ட பாடம். இசைமையெனினும் புகழ்மையெனினும் பொருள் ஒன்றே ,

2. பெருமிதமாவது, தன்னைப் பெரியன் எனப் பிறர்மதிக்கும் வண்ணம் கல்வி,

தறுகண், இசைமை, வண்மை என்பவற்றின் பேரெல்லைக்கண் கிற்றலாகும்.