பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்- நூற்பா ல் è品

அறிவு, ஆண்மை, புகழ், ஈகை ஆகிய சிறப்புக்களால் மக தள் எல. லோராலும ஒப்ப நில்லாது தனக்கு வரம்பாகிய தலைமையராய் உயர்ந்து நிற்றல் பெருமிதம் எனக்கொள்ளுதல் பொருந்தும். கல்வியென்பது தவமுதலாகிய அகக் கருவிகளின் செயறறிறம். தறுகண் எனபது உள்ளத் திண்மையாகிய வீரம், இசைமையென்பது எக காலத்தும் பழியொடு வருவன செய்யாமையாகிய புகழ்ததிறம், புகழ்மை எனப்பாடங்கொள்வர் இளம்பூரணர் . கொடையென்பது தன் கண் உள்ள உயிர் உடம்பு உறுப்பு முதலிய எல்லாப்பொருள். களையும் பிறர் ககு வரையாது வழங்குதலாகிய கொடைத்திறம் இவை நான்கும் காரணமாக மககளிடத்தே பெருமிதம் என்னும் மெய்ப்பாடு தோன்றுதல் இயல்பு. எனவே இது தன் கண் தோன்றிய பொருள் பற்றி வரும் என்பர் பேர்ாசிரியர்.

இளம்பூரணம்

இ. உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற

வெறுப்ப வந்த வெகுளி நான்கே.

என் -எனின். வெகுளியாமாறும் அதற்குப் பொருளும் உணர்த்துதல் துதலிற்று.

( இ-ன்.) உறுப்பறை முகலாகச் சொல்லப்பட்ட நான்கினா னும் வெகுளி பிறக்கும் என்றவாறு.

இப்பொருள் நான்குந் தான் பிறரைச் செய்யுங்காலும் வெ குளி பிறக்கும் , தன்னைப் பிறர் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும் என்று கொள்க."

உறுப்பறையாவது-அங்கமாயினவற்றை அறுத்தல். குடிகோளாவது-கீழ்வாழ்வாரை நலிதல். அலை என்பது-வைதலும் புடைத்தலும். கொலை என்பது-கொல்லுதற் கொருப்படுதல்.

"வெறுப்பின்' என்பது பேராசிரியருரையிற் கண்ட பாடம், 1, உறுப்பறை, குடிகோள், அலை, கொலை ஆகியவற்றைப் பிறர் தன் கண் செய்யுங் கால் அவைகாரணமாகத் தன் கண் வெகுளியாகிய காரியம் பிறத்தலும் தான் பிறர் கண் செய்யுங்கால் அச்செயல்களுக்குக் காரணமாகத் தன் கண் வெகுளி பிறத்தலும் என உறுப்பறை முதலிய இவை கான்கும் வெகுளியின் காரியமாகவும் காரணமாகவும் கிகழ்வன என்பது கருத்து. இவை நான்கும் பிறர் செய்த வழியே இவை காரணமாகத் தன் கண் வெகுளிதோன்றும் என்பார், 'இது பிறன்கட்டோன்றிய பொருள் பற்றிவரும் என்றார் பேராசிரியர்.