பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

擎a, தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல

பாரதியார்

கருத்து :- இதில், வெகுளிவகை நான்கும் அவற்றின் பொது இயல்பும் கூறப்பெறுகின்றன.

பொருள் :- உறுப்பறை-சினை சிதைத்தல்; அதாவது அங்கபங்கம்; குடிகோள்-ஓம்பற்குரியாரை நலிதல்; அலை-அடித்தும் இடித்தும் அலமரச் செய்தல்; கொலை-கொல்லல்; என்ற வெறுப்பின் வந்த வேகுளி நான்கே-இவை நான்கும் வெறுப்பால் விளையும் வெகுளி வகைகளாகும்.

குறிப்பு:-உறுப்பின் ஊறும், சுற்ற நலிவும், அலைப்பும். கொலையும் வெறுப்பால் விளையும் சினமுதலாதலின் இவை "வெறுப்பின் வந்த வெகுளி நான்கே' என அவற்றின் இயல்பு வகைமைகள் குறிக்கப்பட்டன. தீதில் சினம் அறமாதலின் அதனை விலக்கி வெறுத்தற்குரிய வெகுளிவகையே இங்குக் கூறப்பட்டன. ஈண்டு, 'என நன்வெறுப்பின் வந்த' என்றிளம் பூரணர் கொண்ட பழைய பாடம், வெறுப்பு மிகுதியால் விளையும் வெகுளியின் பெற்றியை இனிது விளக்குதலறிக இதில் 'என்ற,’ என்பது இளம்பூரணர் பாடத்து என’ போல எண் குறிப்பதை என்றும் எனவும் ஒடுவும் என முன் குறித்த இடையியற் சூத்திரத்தாலறிக. ஈற்றேகாரம் தேற்றம்: அசையுமாம். (so)

ஆய்வுரை இது, வெகுளிக குளிய பொருள் வகையுணர்த்துகின்றது. (இ- ள் உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என வெறுத்தற்குரிய வெகுளி நால்வகைப்படும். எ-று.

உறுப்பறை உறுப்புக் களை அறுத்தல; அஃதாவது யாக்கையின் உறுப்புக்களாகிய கையினை வெட்டுகல் கண்ணைத் தோண்டுதல் முதலிய கொடுஞ் செயல்கள. குடிகோள் என்பது பிறரது குடிப்பிறப்பின் அவருடைய சுற்றத் தாாக கும் கேடு சூழ்தல்.

1. 'வெறுப்பின் வந்த வெகுளி என்பதற்கு, உறுப்பறை குடிகேசள் அல்ல். கொலை எனக் கண்டோர் வெறுக்கத்தக்க தீமைகள் கான் கும் காரணமாகத் தோன்றிய வெகுளி கால்வகைப்படும் என்பதாம். கனிவெறுப்பின் வந்த வெகுளி' என்பது இளம்பூரணர்கொண்ட பாடம். என்ற வெறுப்பவந்த வெகுளி என்பது.

தொல்காப்பிய மூலப்பதிப்பிற் காணப்படும் பாடமாகும்.