பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல் தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

'வயலைக் கொடியின் வாடிய மருங்குல்

உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்’ (புறம். சடு)

என்றும்,

'புவிநிறக் கவசம் பூம்பொறி சிதைய

எய்கனை கிழித்த பகட்டெழில் மார்பின் மறலி அன்ன களிற்றின் மிசை யோனே’ (புறம். கங்)

என்றும்,

காயாம்பூக் கண்ணிக் கருந்துவ ராடையை

மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர் ஆயனை யல்லை’’ )وي 40 . وفي نهايت( என்றும்,

'தேனொடு நீடு மயிற்குற மாக்கள்' என்றும் வரும்.

அடக்கம் என்பது-மனமொழிமெய்யி னடங்குதல். அது பணிந்த மொழியும் தானை மடக்கலும் வாய்புதைத்தலும்

போல்வன.

'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்'

(குறள் கஉச)

சினதும்,

'யாகாவா ராயினும் நாகாக்க' (குறள் கஉஎ) என்றும்,

'நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்” (குறள் கஉசு)

என்றும் வருவன. இதுவும் அடங்காமைபோலாமையின் மெய்ப்பாடாயிற்று."

வரைவு என்பது- செய்யத் தகுவனவும் தவிரத் தகுவனவும் ரைந்து ஒழுதும் ஒழுக்கம். அது,

5. மனமொழிமெய்யின் அடங்குதலாகிய இவ்வடக்கத்திற்கும் (இவ்வாறு அடங்கு தலில்லாத அடங்கா மைக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் மெய்யின் கண் புலப் பட்டுத் தோன்றுதலின் இவை மெய்ப்பாடெனப்பட்டன என்பதாம்.