பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா க.உ •磷磷

இதன்கண் உள்வேர்ப்பர் என்றதனான் மனநிகழ்ச்சி ஆகியவாது காண்க.

ஐயம் என்பது-ஒரு பொருளைக் கண்டவழி யி து வெ ன த் துணியாத நிலைமை,

'அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு' (குறள். க0.அக.) என்றவழி ஐயம் மனத்தின்கண் நிகழ்ந்தவாறு காண்க.

மிகை என்பது-ஒருவனை நன்கு மதியாமை.

'மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

தகுதியான் வென்று விடல்." (குறள், க.சி.ஐ) இதனுள் மிகுதி யென்பது நன்குமதியாமையாம்.

தடுக்கம் என்பது-யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோ மென வரு மனநிகழ்ச்சி.

'கொடுங்குழாய் துறக்குநர் அல்லர் நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே (கலித். கக)

என வரும்.இத்தனையும் கூறப்பட்டன அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவென்று கொள்க." (க.உ.)

பேராசிரியம் இ ச் சூ த் திர ம் மேற்கூறிவந்த எண்ணான்குமன்றி இவை முப்பத்திரண்டும் அ ைவ போ ல மெய்ப்பாடெனப்படுமென்ட துணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஆங்கவை ஒருபாலாக-எள்ளன் (252) முதலாக விளையாட் (259) டிறுதியாகச் சொல்லப்பட்ட முப்பத் திரண்டும் ஒருகூறாக ஒருபாலென்பது இனிச் சொல்லுகின்ற ஒருகூறென்ற வாறு; பின்னர் அவற்றையெல்லாம் எண்ணி 'இவையு முளவே


حمےہی -----ساس قسم۔ --

9. அடுத்து வரும் து ற் க் ன் அகத்திணைக்குரியவற்றையே விரித்துக் கூறுதலால், இதுகாறும் கூறப்பட்டதை அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகிய மெய்ப்பாடுகள் எனப்பட்டன.