பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wii இந்நூலே ஆராய்ச்சிசெய்து வெளியிடுபவர் தமிழராய்ச்சித் துறை விரிவுரையாளர் வித்துவான் திரு. க. வெள்ளைவாரணர் ஆவர். இவர் நல்ல தமிழ்ப் புலமையும் அடக்கம் முதலிய நற் பண்புகளும் வாய்க்கப்பெற்றவர். தமிழார்வத்துடன் பணிபுரியும் இவருக்கு எனது நல்வாழ்த்து என்றும் உரியதாகும். தொல்காப்பியமாகிய இந் நூலின் அருமை பெருமைபற்றி அறிஞர்கள் மேலும் ஆராய்ந்து கூறும் சிறந்த உண்மைகள் நம் பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பெறும் என்பதனைத் தமிழ் அன்பர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அஆக) தி. மு. நாராயணசாமி பிள்ளே