பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 75 ஐந்திரம் என்பது ஐந்திர வியாகரணம் எனவும் இந்திரளுற் செய்யப்பட்டது ஐந்திரமென்ருயிற்று' எனவும் உரையாசிரியர் நச்சினர்க்கினியர் கூறியுள்ளார். ஆரியமொழியின் வளர்ச்சி கருதி இந்திரனற் செய்யப்பட்டது ஐந்திர வியாகரணமாகும். வட மொழியினும் வல்லயிைனன் என்பார் ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன் எனப் பனம்பாரளுர் கூறினர் என்று சிவஞான முனி வர் கூறுவர். ஐந்திர வியாகரணம் என்பதொன்றுண்டோ என ஐயுறு வாரும், இல்லையென மறுப்பாருமெனப் பல திறத்தர் ஆராய்ச்சி யாளர். போப தேவரது தாது பாடத்திலேயுள்ள சுலோக மொன்றில், வடமொழியிலக்கணஞ் செய்தார் இந்திரன் முதலிய எண்மரெனக் கூறப்பட்டுளது. ஆயினும் பாணினியம் ஒழிந்த ஏனைய இலக்கண நூல்களில் ஒரு சில சூத்திரங்கள் தவிர நூல் முழுமையுங் காணப்படாமையின் அந்நூல்கள் இறந்துபோயின வெனவே எண்ண வேண்டியுளது. "வாக் வை பராக் வ்யாக்ருதா” என்ற ரிக் வேத சாயன பாடியத்திலே ஐந்திரத்தைப் பற்றிச் சொல்லப்பட்டுளது. கிருஷ்ண யஜுர்வேதம் தைத்திரீய சம்ஹிதை முதல் பிரபாடகம் முதல் அநுவாகம் சாயண பாடியத்தில் வியாகரணத்தை முதன் மையாகக் கொண்ட பொருளறிவு இன்றியமையாததாகலின் தேவர்களால் வேண்டப்பெற்ற இந்திரன் வியாகரணத்தை இயற் றினன்' என்றும், இப்பொருள் ஆருவது காண்டம் நான்காவது பிரபாடகத்திற் கூறப்பட்டுள்ளதென்றும் சாயணர் விளக்கியுள்ளார். வடமொழி யிலக்கண நூலாசிரியர்களில் இந்திரனே முதலாசிரி யன் என்பது மேற்காட்டிய தைத்திரீய சம்ஹிதையாற் புலளுதல் காணலாம். அநுமான் சூரியனிடமிருந்து வியாகரணத்தைக் கற்றதாகவும் சூத்திரம், விருத்தி அவற்றின் பொருள்கள் முதலியவற்றுடன் தவ