பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தொல்காப்பியம். வியாகரணங்களையுங் கற்றுணர்ந்ததாகவும் வான்மீக ராமாயணம் உத்தர காண்டம் 35-ஆம் சர்க்கம் 43, 45,-ஆம் சுலோகங்களில் ஆசிரியர் குறிப்பிடுகின்ருர். கிஷ்கிந்தா காண்டம் 3-ஆவது சர்க்கத்தில் இவனது நீண்ட பேச்சினிடையே ஒரு சிறு பிழை யுங் காணப்படாமையால் இவன் வியாகரணத்தைப் பல முறை யும் பயின்றிருக்கவேண்டும் என இராமபிரான் அநுமான வியந்து பாராட்டுகின்ருர். இப் பாராட்டுரை அநுமானது இலக்கணப் பயிற்சியை வலியுறுத்துவதாகும். 'எப்பொழுது இவனுக்குச் சாத்திரங்களைக் கற்கும் ஆற்றல் ஏற்படுகிறதோ அப்பொழுது இவனுக்குச் சாத்திரத்தைக் கொடுக்கிறேன். அதைப் பெற்று மிகுந்த நாவன்மை யுடையவகை ஆவான். சாத்திரங்களைக் கற்றுப்பெற்ற தேர்ச்சியில் இவனுக்கு ஒப்பாவான் ஒருவனுமிரான்" என இந்திரன் அநுமானுக்கு வரந்தருவதாக வான்மீக ராமாய ணம் உத்தரகாண்டம் 36-ஆம் சர்க்கம் 14-ஆம் சுலோகம் அமைந்துளது. இப்பகுதியில் 'சாஸ்த்ரம் என்பதற்குச் சாத்திரங் களின் பொருளுணர்ச்சி அஃதாவது ஐந்திர வியாகரணம் என்று பொருள் எனக் கோவிந்தராசர் என்பார் உரைகண்டுள்ளார். மேற்கூறியவற்ருல் இந்திரனற் செய்யப்பட்டதோர் வியாகரணம் ஒன்றுண்டெனவும் அதனை அநுமான் பயின்று தேர்ந்தனனென வும் வான்மீக முனிவர் தம் இராமாயணத்திற் குறித்துள்ளமை இனிதுணரப்படும். வேதாந்த தேசிகரின் ரகஸ்யத்திரய சாரத் தின் முடிவில் ஐந்திர வியாகரண பண்டிதன் மகாராஜர்க்கு உப தேசித்தானிறே' எனவருந் தொடரில் ஐந்திர வியாகரண பண்டிதன் என்னும் சிற்ப்புப் பெயரால் அநுமானைக் குறித்துள்ள மையும், அயிந்திரம் நிறைந்தவன் (யுத்த-விபீடணன் அடைக் கலப் படலம். 42) எனக் கம்பர் அனுமனைக் குறிப்பிட்டமையும் வியாகரணத்தில் தொன்மை வாய்ந்தது ஐந்திரவியாகரணமே யென்னும் உண்மையை விளக்குதல் காணலாம். 'வர்ஷர் என்ற ஆசிரியரின் மாணவர் பலருள் பாணினி யென்பார் மந்தமதியாயிருத்தல் கருதி வர்ஷரின் மனைவியார்