பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨8 தொல்காப்பியம் பிரமதேவர் தேவர்களுக்குச் சொல்ல அதனை இந்திரன் நூருயிரம் கிரந்தங்களாகச் சுருக்கினுனெனவும், சாலாத் துறையூரில் பிறந்த பாணினி யென்பவர் அந்நூலை எண்ணுயிரங் கிரந்தங் களில் அடக்கிெைனனவும் தென்னுட்டிற் ருேன்றிய பார்ப்பன ைெருவன் அதனை இரண்டாயிரத்தைந்நூறு கிரந்தங்களில் அடக்கினரெனவும் அந்நூலே இப்பொழுது வடநாடுகளிற் கற்கப் படுகிறதெனவும் கூறியுள்ளார். புத்தமத நூல்கள் பலவற்றில் ஐந்திர வியாகரணப் பெயர் காணப்படுகிறதென்றும், சாரிபுத்தன் தனது பதினரும் ஆண்டில் ஐந்திரம் படித்தான் என அவதான சதகத்திற் சொல்லப்பட்ட தென்றும் டாக்டர் பர்ணல் கூறியுள்ளார். சாகடாயண வியா கரணம் இந்திரனைக் குறிப்பிடுகின்றதெனச் சமணர் கூறுவர். இதுகாறும் எடுத்துக்காட்டியவற்ருல் இந்திரனற் செய்யப்பட்ட தோர் இலக்கணநூல் பாணினிக்கு முற்பட வழங்கியதென்பதும், அந்நூல் வைதிக சமயச் சார்புடையதென்பதும், அந்நூல் வழக் கொழிந்து இறந்துபோகவே வைதிக சமயத்தாரும் புத்தரும் சமணரும் பிற்காலத்தில் அப்பெயராற் பல சுருக்க நூல்களைச் செய்தனரென்பதும் உய்த்துணரப்படும். - ஐந்திர இலக்கணமரபு எல்லோராலும் எளிதிலறியத் தக்க முறையில் மொழியின் இயற்கை யமைப்பினை யொட்டி யமைந்த தொன்மையுடையது. பாணினியத்திற் காணப்படும் இலக்கண மரபு மிகவும் சிக்கலானது; பலகாலும் ஆழ்ந்து படித்தோர்க் கல்லது ஏனையோர்க்கு விளங்காதது. விளங்கத்தக்க குறியீடு களால் எளிய முறையில் இலக்கணங் கூறும் ஐந்திரமும் விளங்காத கடின குறியீடுகளால் அரிதிற் பயிலத்தக்க பாணினிய மும் அமைப்பு முறையில் வேறுபட்டனவாம். பாணினியம் மற்றவற்றினின்று வேறுபட்டுப் புதிய பல குறியீடுகளைக் கூறினும், பழைய கோட்பாடுகளை ஆளும்போது