பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 79 'பிராஞ்ச என்ற சொல்லால் ஆளுகிறது. முன்னுளிலிருந்த சில சொற்களை யாதொரு விளக்கமுமின்றி எடுத்தாண்டும் பண்டை நாளில் வழங்கிய சில பழஞ் சொற்களைத் தாம் கண்ட புதுப் பொருளில் வழங்கியும் பாணினியார் தம் நூலை அமைத்துள்ளார். கணபாதர் பதஞ்சலி முதலியோர் பாணினியத்தில் விளங்காத வற்றை விளக்கும் பொருட்டு ஐந்திர முதலிய பழைய நூற் குறியீடுகளை அவ்வாறே வார்த்திகத்திலும் மாபாடியத்திலும் எடுத்துக்காட்டியுள்ளனர். இவர்கள் ஐந்திரத்திலிருந்து ஆண்ட வற்றையெல்லாம் பிராஞ்ச என்ற சொல்லாற் காட்டியுள்ளார் கள். பாணினியும் அதே சொல்லாற் குறித்துள்ளார். தைத்திரீய ஆரண்யகத்திற் காணப்படும் ஒலிநூற் குறிப்புக் கள் சிலவும் சாந்தோக்கிய உபநிடதத்தில் வரும் குறியீடுகள் சிலவும் ஐதரேயப் பிரமாணத்திலுள்ளன. சிலவும் ஐந்திர வழக்கு களே எனவும், கோபதப்பிராமணம் -24-ல் வரும் சிறு வாக்கி யத்தில் ஐந்திர வழக்குகள் பலவுள்ளன எனவும், வேதகற்ப சூத்திரங்களிலேயும் இவ்வழக்குகள் வந்துள்ளன எ ன வ ம், இவற்ருல் வேதகாலத்திலே ஐந்திர வழக்குகள் உள்ளமை தெளியப்படுமெனவும், தைத்ரீயப் பிராதிசாக்கியம், காத்தியா யனப் பிராதிசாக்கியம், பாணினினியம், பதஞ்சலி மாபாடியம் என்பன ஐந்திர இலக்கண மரபினை எடுத்தாண்ட நூல்கள் எனவும், இக்குறிப்புக்களால் ஐந்திரமென்னும் பெயருடையதோர் இலக்கணத் தொகுதியிருந்தமை உறுதியாதல் புலனுமெனவும் டாக்டர் பர்ணல் என்னும் பேரறிஞர் ஆராய்ந்து விளக்க யுள்ளார். இந்திரனுக்குப் பின்னும் பாணினிக்கு முன்னுமாக ஒருவன் பின் ஒருவராய் வந்த வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்பர். இவர்கள் ஒவ்வொருவர்க்கும் முப்பதாண்டுகளாக வைத்துக் கணக்கிடுங்கால் இந்திரனுக்கும் 1. செந்தமிழ், இருபத்தாருந்தொகுதி, பக்கம் 87-95. 199-2:19,