பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 魏篡 யத்திற் காணப்படாமையால் தொல்காப்பியனர் காலத்தில் பாணி aயம் போன்றதொரு வடமொழி இலக்கண மரபு தோன்றவில்லை யென்பது நன்கு தெளியப்படும். இனி ஐந்திர நூலைப்பற்றித் தமிழ் நூல்களிற் குறிக்கப்படும் செய்திகளை நோக்குவோம். இந்திரனற் செய்யப்பட்ட நூலினை விண்ணவர் கோமான் விழுநூல்' எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. இத்தொடரிற் குறிக்கப்பட்ட நூல் ஐந்திர வியாகரணமே என அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் குறிப்பிட்டுள்ளார்கள். 'புண்ணிய சரவணம் பொருந்துவிராயின், விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர் என மாங்காட்டு மறையோன் கூறியதைக் கேட்ட கவுந்தியடிகள், கப்பத்திந்திரன் காட்டிய நூலின் மெய்ப் பாட்டியற்கையின் விளங்கக் காணுய் என அவனுக்கு மறுமொழி கூறியதாக இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். "தேவர்களினும் வைத்து ஆயுக்கற்பத்தினை மிகவுடைய இந்திரன் தோற்றுவித்த வியாகரணத்தினை எம்முடைய அருக குமரன் அருளிச் செய்த பரமாகமகங்களிற் காண்கின்றிலையோ' என்பது கவுந்தியடிகள் மறையோனை நோக்கிக் கூறிய மறுமொழியாகும். இதல்ை 'விண்ணவர் கோமான் விழுநூல் என மறையோன் கூற்றில் வைத்துரைக்கப்படும் ஐந்திர நூலும் அதனில் வேருகக் கவுந்தி யடிகள் குறித்த பரமாகமமும் வேறுவேறென்பது போதரும். கவுந்தியடிகளின் சமண் சமயப் பற்றினைப் புலப்படுத்தும் முறை யில் இளங்கோவடிகள் இம்மறுமொழியினைக் குறித்துள்ளமை இவண் சிந்தித்தற்குரியதாகும். இந்திரனது நூலிற் சொல்லப் பட்ட பொருள்களையெல்லாம் தம் சமய நூலாகிய பரமாகமத் திலேயே கண்டு மகிழலாம் என்பது கவுந்தியடிகளின் பற்றுதல் மொழியாகும். 'கற்ப மென்றதனைப் பிராகிருதத்தாற் கப்பமென் ருர். தேவர்களிடைச் சென்று கற்பிக்கும் இந்திரன் என்றுமாம். மெய்ப்பாட்டியற்கை-பராமாகமம். அதில் ஐந்திர வியாகரணம்