பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 தொல்காப்பியம் காணலாம்” என அடியார்க்குநல்லாரும், பரமாகமத்தில் இந்திரன் நூலினைக் காணலாம் என அரும்பதவுரையாசிரியரும் மேற் காட்டிய தொடர்ப் பொருளை விளக்கியுள்ளார்கள். இக்குறிப்புக் களே யெல்லாம் நுணுகியாராயுங்கால் தொல்காப்பியனர் காலத் திற் பெருவழக்கிலிருந்த ஐந்திரம், இளங்கோவடிகள் காலத்தில் வழக்கொழிந்து, மாங்காட்டு மறையோன் கூறியவாறு புண்ணிய சரவணம் படிந்து தெய்வத்தினிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் அருகி மறைந்து விட்டதென்பதும், வழக் கொழிந்த அந்நூற்பொருளை அறிந்து கொள்வதற்கு அக்காலத் தவர் பெரிதும் விரும்பினர்களென்பதும், மறைந்த ஐந்திரப் பொருள் தம் இறைவன் அருளிய பராமாகமத்திலும் சொல்லப் பட்டுளது எனச் சமண் சமயத்தினர் தமக்குள் சொல்லி மகிழ்ந் தனர் என்பதும் நன்கு புலனும், மறைந்துபோன ஐந்திரப்பொருளைச் சிவபெருமான் பாணினி முனிவர்க்குப் புலகை அருளிச்செய்தார் என்பது, பாணினி முனிவர் வரலாற்றிற் குறிக்கப்படும் செய்தியாகும். இந்திரத்தை யினிதாக ஈந்தார் போலும் எனத் திருநாவுக்கரசடிகளார் சிவ பெருமானப் போற்றுதலால் ஐந்திர நூற்பொருள் இறைவன் திருவருளால் வெளிப்பட்டதென்னுஞ் செய்தி இனிதுணர்த்தப் படுதல் காண்க. காலப்பழமையாற் கற்றற்கியலாது அருகி மறைந்த ஐந்திர வியாகரணத்தைச் சிவபிரான் பாணினி முனிவர்க்கு எளிதாக்கி வகுத்துரைத் தருளிஞர் என்பர். வைதிக சமயத்தவரால் வேதத் திற்கு அங்கமாக ஒதப்பட்டுவரும் பாணினியத்திற்கு முதலாகச் சொல்லப்படும் ஐந்திரமும் வைதிக சமயச் சார்புடையதென்பதிற் சிறிதும் ஐயமில்லை. வேதவேள்வியை வெறுத்தொழுகும் சமணர்களால் ஐந்திர வியாகரணப் பயிற்சி மதிக்கப்படாமை சமணத் துறவியாகிய கவுந்தியடிகள் மாங்காட்டு மறையோனை நோக்கிக் கூறிய மறுமொழியால் உய்த்துணரப்படும். கப்பத்