பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感噶 தொல்காப்பியம் யுணர்த்துதல் சமண சமயத்தவர் நூல்களிலன்றி அவற்றிற்கு முற்பட்ட வடமொழி தென்மொழி நூல்களிற் காணப்படவில்லே யென்றும், ஆகவே படிமையோன் என இச்சொல்லாற் சிறப் பித்துப் போற்றப்பெற்ற தொல்காப்பியருைம் சமண சமயத்த வராதல் வேண்டுமென்றும் அறிஞருெருவர் கூறியுள்ளார் படிமை என்பது படிமா என்ற பிராகிருதச் சொல்லின் திரிபென்பதும், அச்சொல் தவவொழுக்கம்' என்ற பொருளில் சமண சமய நூல்களிலன்றி ஏனைய நூல்களில் வழங்கப்படவில்லை யென்பதும், தொல்காப்பியனர் சமண சமயத்தில் இல்லற நெறியில் நின்று சிறந்த தவவொழுக்கங்களை மேற்கொண்டவ ரென்பதும் அவர் தம் ஆராய்ச்சி முடியாகும். படிமை என்னுஞ் சொல் சமணரது தவவொழுக்கத்தையே சிறப்பாகக் குறித்து வழங்கியதாயின், அச்சொல்லை ஏனைச் சமயத்தார் தம் நூல்களில் உடன்பட்டு வழங்கியிருக்கமாட்டார்கள். படிமை என்னும் இச்சொல், "கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை யுயர்ந்தோருவப்ப கூறினை பெருமநின் படிமையானே' எனப் பதிற்றுப்பத்து 74-ஆம் பாடலில் வைதிகவொழுக்கத் தினையுங் குறித்து வழங்குகின்றது. ஆகவே படிமையென்பது சமணரது தவவொழுக்கத்தையே குறிக்குமென்பார் கொள்கை பிழைபடுதல் காணலாம். படிமை என்பதிற் படியென்பது பகுதி யாகும். படிமை, முறைமை என்பன ஒரு பொருட் சொற்களாம். படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது எனவருந் தொல்காப்பிய நூற்பாவில் படிமை என்னும் இச்சொல் நிலத்தின் தன்மையைக் குறித்துநின்றது. படியுடையார் பற்றமைந்தக்கண்ணும் எனவருந் திருக்குறளிற் படியென்னுஞ் சொல், நிலம் என்னும் பொருளில் வழங்கியுளது. நிலத்தியல்பால்